என்ன சொல்லி அழைத்தாலும் ஏது சொல்லி கொடுத்தாலும் திருந்தாத முகநூல் உலகமே நீ இல்லால் வாழ்க்கை இல்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை. (இது நண்பர்)
காலை எழுந்தவுடன்
பதிவு
பின்பு கனிவுடன் தருவது
விருப்பு
மாலைவரை நல்ல
'சாட்டு'
என வழக்கப்படுத்தி கொள்ளு
பாப்பா.... (இது அவரின் நண்பர்)
நாம்லாம் நல்ல நாள்லயே நாயகம், நாலுபேர் சீண்டினால் / எடுத்துக் கொடுத்தால் ச்சும்மா விடுவமா, ஆருக்கிட்ட?
சாட்டு சாட்டு என்று சாட்டுவோம்
சார்பட்டா பரம்பரையே வந்தாலும் சாட்டுவோம்
பகிர் பகிர் என பகிருவோம் பால் நிலா வரும்வரை பண்பாடுவோம்
லொள் லொள் என லொள்ளுவோம்
லோலாக்கு லால்டப்பிமா ஆடும்வரை ஆடுவோம்
கவுஜ கவுஜ எனக் கவிபாடுவோம்
கவுந்தடிச்சுப் படுத்தாலும்(தேனும்?) கலாய்ப்போம்
விருப்பு விருப்பு என விருந்தோம்பலிடுவோம்
விருப்பமில்லையேல் விரல் தேடி விரலி நாடுவோம்.
ப்ளஸ் டூவே தாண்டாக்கால் ப்ரஜாபதியைச் சீண்டினால்
பிச்சு ஒதறுவோம் பிச்சாண்டவரே, பீச்சுப் பக்கம் வாரும்!!
இப்பிடிப் பொலம்ப வுட்டுட்டியே 'மார்க்'கண்டேயா? இப்பவே கண்ணைக் கட்டுதே?
நோக்கு மட்டும் 16, எங்களுக்கு ஏன் 24 பத்தலியே? 4*24 கொடுத்தாலும் பத்தாது போலயே?
இன்னும் 20,30 பாக்கி இருக்காம், புச்சா ஒண்ணியும் கொண்டாரலியா மார்க்கண்டேயா?
வாட்ஸப் வசம்பாய் கசந்தது,
ஃபேஸ்புக் ஃபேஸ்தடிச்சுப் போச்சு,
முக நூல் முகமறியா மூச்சடைச்சுது,
இன்ஸ்டா நமக்கில்லை, நமக்கில்லை,
டெலிகிராம் ஆவுறதில்லே, டெல்லிகூட சீண்டாதே,
குக்கூ குக்கூ கூ கூவுறது ஆருக்குக் கேட்கும்?
சிக்னல் எப்பவுமே ரெட்ல கீதாம்
ட்விட்டர் நம்ம பேட்டையில்லே, நம்ம பேச்சை நாமே கேட்குறதில்லை, நாட்ல எவன் கேட்பான்?
புச்சா ஒண்ணு சுதேசி சந்தேஸ் வந்திருக்காம் சந்தேஸ் சங்கேத் சங்கீத் சரஸமாடுவோமா சார்பட்டாஸ்?
இப்பிடிப் பொலம்ப வுட்டுட்டியே 'மார்க்'கண்டேயா? இப்பவே கண்ணைக் கட்டுதே?
வூட்டம்மாக்கள்தான் பாவம் வுட்டுட்டா தெறிச்சு ஓடிடுமே இக்கூட்டம்
மேய்ப்பர் இல்லா மேசானிகள் ஓய்வறியா உழைப்பாளிகள்
வூட்டம்மை தண்ணி தெளிச்சு விட்டுட்டாலும் வூடுதாண்டா உடும்பாய் (மன) உல்லாசம் களமாடுதே!!
No comments:
Post a Comment