ஒண்ணு ரெண்டு உண்டு
கண்ணில் ரெண்டும் வண்டு
வண்டில் ஒண்ணு மண்டு
மண்டில் நில்லா செண்டு
செண்டில் உண்டே வண்டு
வண்டு உண்ணும் தேன்
தேன் தரும் அமிழ்தேன் அமிழ்தும்தேன் அதிலும்தான் அமிழ்ந்தேன்
அமிழ்ந்ததில் உமிழ்ந்ததோ உன்மத்தம்
உன்மத்தம் கண்டே மெய்முத்தம்
மெய்முத்தம் அது நல்முத்தம்
நல்முத்தோ மென்முத்தோ பொன்முத்தோ
முத்தோடு முத்தாட ஆட
கட்டோடு குழலாட ஆட
ஆட, கண்ணீரில் நீயாட ஆட
ஆடிய ஆட்டமென்ன, தேடிய செல்வமென்ன,
பாடிய பாட்டென்ன
ஓடிய ஓட்டமென்ன
பாடித் திரிந்த பறவைகளோ
கூடித் திரிந்த குயிலினமோ
தேடிக் களித்த களிரினமோ
தேடிக் களித்த தெம்மாங்கோ
ஓடி ஓடிப் போராடி
ஒளி(ர்)ந்ததோ ஓராயிரம் பல்லாங்கு
பல்லாங்கில் பொல்லாங்கு காணீரோ
கானல் நீர்தான் வீணில் பேணீரோ
பேணில் பயிலரங்கு பாவினமே பாடாதோ
குயிலினமே கூவாதோ
கூவிக் கூவி அழைப்பார்
குவலயமெலாம் குலாவுவார்
குலாவிய போழ்தில்
உலாவிய மாண்பின்
துளாவிய தூமதுரம் துள்ளித் துள்ளி வாராதோ
வாராதென் மாமணியே தூமணித் துலாபாரமே
பாரம்தான் மானிடவாழ்வு பொறுப்பாரோ
பொறுப்பதுதான் வாழ்வியலோ
வாழ்வியலே செவ்வியலாம்
செவ்வியலும் நற்றுயிலும்
குற்றேவல் புரியா
கூவத்தே நாறிடுமோ
நாறியதோ நல்மணம்
நல்மணம் தான் நாற்றின்கால் நாற்றங்கால் நோய் நொடி நோக்குங்கால்
நோக்கியதே நுண்ணுயிர் நுணலும்தான் நாடியதே.
No comments:
Post a Comment