Sunday, August 1, 2021

42 45 or 48 ஒரு மண்டலம் (ஒரு பார்வை)

 இது இப்படியாகத்தான் இருக்கணும் என்றில்லை, நம்ம கொனஷ்டை கோயிந்து பாணியில் யோசிச்சது. ஆக, ஆதாரம் சேதாரம்லாம் கேட்கப்பிடாது. 


எந்தப் பிரார்த்தனையை எடுத்துண்டாலும் ஒரு மண்டலம் அனுஷ்டிக்கணும் என்பார்கள். அது அனேகமாய் 42 நாட்களைக் குறிக்கும் என நினைக்கிறேன், அதாவது 6 வாரம், வாரத்தில் 7 நாட்கள் ஆக 42.  இன்னொரு கணக்கில் 48 எனக் கூட சொல்வதுண்டு, ஆனால், அது சரியல்ல என்பது என் புரிதல். 


இந்த 42 என்ன கணக்கு? 


ஒரு லாஜிக்படி 27 நட்சத்திரங்கள், 15 திதிகள் சுற்றிச் சுற்றி வருவது ஒரு ரவுண்டு நமது பஞ்சாஙக நாட்குறிப்பின்படி. அதாவது 42 நாட்கள் மொத்தம் ஒரு சுழற்சியில். இன்று துவங்கிய ஒரு விஷயம் ஒரு மண்டலம் முடித்தால் பிரார்த்தனையின் வீச்சு பூர்த்தியாகும் என்பது நம்பிக்கை. இது சரியாக இருக்க வாய்ப்பு உண்டு. 


ரெண்டாவது லாஜிக், கொனஷ்டை கோயிந்து உள்ளே வர்றார். 


பிதுர்க்கள் மூன்று தலைமுறைக்கு நார்மலாய் நாம் தர்ப்பணாதிகள் செய்கிறோம். தந்தைவழியில் 3, தாய்வழியில் 3 ஆக 6.   7*3*2=42. மொத்தம் 21*2=42 தலைமுறைக்கான கர்ம பலன்கள் நமக்குக் கிட்ட, ஷண்ணவதி தர்ப்பணாதிகள் 96ம் ஒருவர் ஒரு வருடத்தில் செய்தால் 21 தலைமுறைக்கு பாவ நிவர்த்தி என்று ஒரு கண்ணோட்டம் உண்டு. ஆன்றோர்கள் இது தொடர்பில் கூறியுள்ள குறிப்புக்களிலிருந்தே இதை மேற்கோள் காட்ட விழைகிறேன். 


இந்த 21 தந்தை வழி, 21 தாய் வழி ஆக மொத்தம் 42.  42 க்கு ஒரு மண்டலம், கணக்கு டேலியாகுதா?


p.s.: Just my own interpretation.  அடிக்க வர்ப்டாத், எதுனாச்சும் தவிசு இருந்தால் பேசித் தீர்த்துக்கலாம்.

முருகன், காஞ்சி காமாட்சி இதர சில விரதங்கள் அல்லது பிரத்தியேக பூஜாக்ரமங்கள் 6 வாரங்கள் எனும் கணக்கிலேயே சொல்லப்பட்டிருக்கிறது, அதாவது 6*7=42.


இன்னும் சிலர் 45 , 48 நாட்கள் கொண்டது ஒரு மண்டலம் என்றும் சொல்லிக் கேள்வி.

No comments:

Post a Comment