Sunday, August 29, 2021

வெட்கக்கேடு!!

 யாதும் ஊரே யாவரும் கேளீர் அப்படின்னு கணியன் பூங்குன்றனாரோ யாரோ சொன்னதா வர்லாறு எஸ்டிடியில சொல்லுவாய்ங்கோ, அதெல்லாம் அந்தக் காலத்திற்கு சரிப்பட்டு வந்திருக்குமா இருக்கும். இன்றைய காலத்தில் 20_21ம் நூற்றாண்டில் இது நமக்கு நாமே அடித்துக் கொள்ளும் சாவுமணி எனலாம். 


அவனவன் அந்தந்த நாட்டு எல்லையில் உஷாராய் இருக்கானுக, வந்தேறிகளை விரட்ட என்னென்ன செய்யணுமோ செய்றானுக. முன்னாடியே வந்துட்டவன் ஃபேஸ்புக், வாட்ஸப் இதர சோஷியல் மீடீயாவில் ச்சும்மா போஸ்ட், கமென்ட் போட்டாலே கூப்பிட்டு வெச்சு ஆப்படிக்கும் காலம் இது. அந்தளவுக்கு கருத்துச் சுதந்திரம் தலைவிரித்தாடும் மில்லினியம் இது. 


எந்த இனம் உலகுக்கே ஆப்படிக்குதோ அதே இனத்துக்காரனே அந்த ஆப்படிக்கும் இனத்து அனாதைகளை அகதிகளாகக் கூட ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. 


வர்றவன் போறவன்லாம் என்னவெல்லாம் செய்யலாம், பேசலாம், யார் எவனை வேணாப் போட்டுத் தாக்கலாம், போட்டுத் தள்ளலாம், ஆனால் 'இத்துப் போன இந்த யாதும் ஊரே வாசகத்தை கோடிட்டுக் காட்டி' அம்புட்டுப் பேரையும் இங்கே கொண்டாந்து அடைக்கணும், இந்த மண்ணின் வளங்களை அவனுக உறிஞ்சுவானுக, நாம ஈன்னு இளிச்சுக்கிட்டு 'அதிதி தேவோ பவ"ன்னு இளிச்சவாய்த்தனமாய் நிக்கணும். இவனுக நம்மள்ட்ட வாங்கித் தின்னுட்டு நம்ம வீட்லயே புகுந்து நம்ம பெண்டு பிள்ளைகளையும் நம் உழைப்பையும் நம் சொத்தையும் அபகரிப்பானுக, நாம அவனுக காட்டும் நடுவிரலுக்கு நம் சுட்டு விரலையோ சுண்டு விரலையோ சப்பிக்கிட்டு தேமேன்னு நிக்கணும், என்னய்யா லாஜிக் இது? 


No comments:

Post a Comment