Sunday, August 1, 2021

மாலே மணிவண்ணா

 மாலே மணிவண்ணான்னு ஒரு ஸ்லோகம் வரும். 


இன்று உதயகாலத்திலேயே அந்தப் பாடல் என்னுள்ளே ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. அடுத்த அடி அந்தப் பாடலில் என்ன வரும் அதெல்லாம் தெரியாது. அசலாய் பாடிய பாடகி யாரோ அவர் குரல் மட்டும் ஆழ்மனதில். 


'மாலே மணிவண்ணா' மால் என்றால் திருமால். மால் (Mall) என்றால் வணிக வளாகம். Male மாலே எனும் பெயரில் ஒரு சிறிய தீவு அல்லது நாடு இருக்கு (மாலத்தீவுகளுக்கு மறுபெயர்). 


Male என்றால் ஆண் எனும் ஆணினத்தைக் குறிக்கும். 


மணி (Money) எனும் பணம் இல்லையேல் மால் போய் பிரயோசனமில்லை. சுற்றிப் பார்த்து ஜன்னல் ஷாப்பிங் வேண்டுமானால் செய்துவிட்டு வரலாம். 


Male Manivanna = Male Money Van na Atmanirbar (bhar?) மணி எனும் ஆண் ஓட்டிவரும் ஏ.டி.எம்.மில் காசு ஏற்றும் வேனில் இருக்குமே பணம், அதுவோ? ATM A NIR BAR நீர் பார் ? இன்னாது, ஏ.டி.எம்.ல தண்ணீர் வந்துடுச்சா? பணம்லாம் நனைஞ்சுடுச்சா? BARநாலே 'தண்ணி'தானே? 


மாலே மணி வண்ணா அதாவது மாலே நாட்டில் ஆழிப் பேரலை, பெருமழை நாளில் மணின்றவர் ஓட்டிட்டு வந்த வேனில் இருந்த ஏ.டி.எம்மில் வைக்க இருந்த துட்டெல்லாம் நனைஞ்சு போச்சு. அதாம்லே மேட்டரு!! 


கோக்கு மாக்குக் கோவாலு, கொனஷ்டை கோயிந்துவின் பித்துக்குளி இராவுகள்!!

No comments:

Post a Comment