Sunday, August 8, 2021

திவாலாகும் பாகிஸ்தான்!!!

 திவாலாகும் பாகிஸ்தான்!!!

சமீபத்தில் பரவலாக ஒரு செய்தியை கேட்டிருப்பீர்கள், அது பாகிஸ்தான் வருமானத்தை பெருக்க அந்த அரசு பிரதமரின் வீட்டை வாடகைக்கு விட்டது!
அட பாவிங்களா, இவ்வளவு கேவலமாகவா பாகிஸ்தான் போய்விட்டது?
65 ஆண்டுகளாக இல்லாத சரிவு எப்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் வேகமாக நடந்தது?
அது என்ன எதேச்சையாக நடந்ததா?
இந்தியாவே இதற்கு காரணம் என்று பாகிஸ்தான் அழுகிறது! அதில் உண்மையில்லாமல் இல்லை!
என்ன நடந்தது? எப்படி நடந்தது?
பாகிஸ்தானின் (பாக்) முக்கியமானது விவசாயம், அதற்கு அடுத்து Industry, அடுத்து Mining, Service Sector என்று பல வகைப்பட்ட வருமானம் மீதமுள்ளவையாக இருந்தது. அதன் மொத்த வருமானம் GDP $313 Billion ஆக 2018 ல் இருந்தது, $276 Billion ஆக குறைந்தது. அது மேலும் சரிவடைந்து 2020 ல் $263 Billion ஆனது. இருந்த போதும் அது பெரிதும் கடன் மற்றும் அமெரிக்க, சீனா, அரேபிய நாடுகளின் உதவியையே சார்ந்திருக்கிறது.
மேற்சொன்னவை எல்லாம் நேரடியாக வரும் வருமானங்கள். ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக பாக்கின் மறைமுக வருமானம் என்பதும் மிகப்பெரிய அளவில் தீவிரவாதம் மூலம்தான் இருந்தது. அது என்ன?
ஆஃப்கானிஸ்தானில் ரஷ்ய படைகள் ஆட்சியில் இருந்தபோது அவர்களை எதிர்க்க அமெரிக்கா பாகிஸ்தானை பயன்படுத்தி தலிபான்கள், அல்கொய்தா போன்ற பல இயக்கங்களுக்கு போர்ப்பயிற்சி, ஆயுதங்கள் என்ற பலவற்றை கொடுத்தது. அதன் மூலம் ஆஃப்கன், பாகிஸ்தானில் இருந்த இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்த அதற்கு, ரஷ்யா ஆஃப்கானை விட்டு வெளியேறியதும் அந்த வருமானம் குறைந்தது. அந்த வேளையில் அதை காஷ்மீர் பக்கம் திசை திருப்பியது. அதற்கான உதவிகளை அமெரிக்கா மட்டுமல்லாம அரேபிய மற்றும் முஸ்லீம் நாடுகளிடம் இருந்து மத ரீதியில் பெற்றது. அதாவாது வேலை இல்லாத இளைஞர்களை தீவிரவாதத்தில் ஈடுபடுத்தியது. அது மட்டுமில்லாமல் பாக்கின் ISI, தீவிரவாதிகளின் உதவியோடு போதை மருந்து கடத்தலிலும் ஈடுபட்டது.
இங்கே பல முக்கிய நிதியளிப்புகள் நேரடியாக பாக் ராணுவத்திற்கும், அதன் உளவு அமைப்பான ISI அமைப்புக்கும் வந்ததால், அந்த நாட்டு ராணுவம் பாக் அரசை சாராமல் தன்னிச்சையாக ஆட்சி நடத்தியது. அதை மீறி நடக்கும் ஆட்சிகள் பாகிஸ்தான் ராணுவ அனுமதி, உதவியில்லாமல் நடக்க முடியாது என்ற நிலை உறுவாகிவிட்டது.
அப்போது அரேபிய, மற்றும் முஸ்லீம் நாடுகள் கொடுத்த பணம் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான தீவிரவாத போராட்டத்தில் இருந்தவர்களுக்கும் உதவ ஆரம்பித்தது. அதன் விளைவாக அதுவரை நிதி கொடுத்த அமெரிக்காவிலேயே இரட்டை கோபுர தாக்குதலை நடத்த, அமெரிக்கா வெகுண்டெழுந்தது. அதன் பின்னர் அமெரிக்காவின் நிதியளிப்பு வெகுவாக குறைந்தாலும் இன்னொரு பக்கம் ஆஃப்கானில் குடிகொண்ட நேட்டோ படைகளுக்கு உதவுவதற்காக பாகிஸ்தானுக்கு ஓரளவிற்கு நிதி கொடுத்தது.
அதை சரிகட்ட பாக்கிற்கு மாற்று என்பது காஷ்மீர் மட்டுமாக இருந்தது. அதை வைத்தே முஸ்லீம் நாடுகள் பாகிஸ்தானுக்கு தொடந்து நிதி உதவியளித்தது.
அது மட்டுமல்லாமால் காங்கிரஸ் ஆட்சியில் சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது நமது ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பழைய மெஷின்களை ஏலத்தில் விடும் முட்டாள்தனத்தை செய்தார். அதை அரேபிய நாடுகள் மூலம் வாங்கிய பாகிஸ்தான ISI வருமானத்திற்கான ஒரு மாற்று வழியை இதன் மூலம் அடைந்தது. நம் நாட்டின் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க வேண்டுமெனில் அதற்கான மெஷின் தேவை, அதை சிதம்பரமே ஏலத்தின் மூலம் கொடுத்து விட்டார். அடுத்து மிக சிக்கலான விஷயம் ரூபாய் அடிக்கும் பேப்பர்களை வாங்குவது. அதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் தன் நோட்டுக்களை அச்சடிக்க வாங்கிய நிறுவனத்திடம் இருந்துதான் இந்தியாவும் வாங்கியது என்பதால் அந்த பிரச்சினையும் தீர்ந்தது. அப்புறம் என்ன, இந்திய நோட்டுக்களை அடித்து குவித்தது. எனவே அதன் மறைமுக வருமானம் உயர்ந்தது.
அது மட்டுமல்ல இந்தியாவிற்கு பஞ்சாப், காஷ்மீர் வழியாக போதை பொருள்களை கடத்தி பெரும் வருமானத்தை அதன் ராணுவமும், ISI ஐயும் பெற்றது. அது மட்டுமா, தீவிரவாதிகளுக்கு கொடுக்கும் பணமாக 💰 இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து கொடுப்பது என்பது இலவசமாக நடந்தது. மும்பை துறைமுகத்தில் சோதனை செய்தபோது ஒரு கண்டெய்னர் முழுவதும் புதிய ₹500, ₹1000 இந்திய ரூபாய் நோட்டுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது மூன்று கண்டெய்னர்களிலும் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அது வெளியே வராமால் காங்கிரஸ் அரசு மூடி மறைத்தது. இது எந்த அளவிற்கு மிக மோசமான நிலையை தொட்டது என்பதற்கும் பாகிஸ்தான் இதன் மூலம் எவ்வளவு ஆதாயம் அடைந்தது என்று புரிந்து கொள்ளுங்கள்.
2014 ல் ஆட்சி மாறியதும் காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் அதிகரித்தது. அதில் காஷ்மீர் இளைஞர்களுக்கும், ரோஹிஙா முஸ்லிம்களும் அதிகமாக கல்வீச்சில் ஈடுபட்டனர். அதை செய்ய அவர்களுக்கு பெரும்பாலும் புதிய இந்திய ரூபாய் கரன்ஸிகளில் பணம் கொடுக்கப்பட்டது. அதன் மூலம் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டு இந்தியா முழுவதும் புழக்கத்தில் விடப்பட்டது. அது மட்டுமல்ல முஸ்லிம்கள் வணிகத்தில் அதிகமாக ஈடுபட்டிருந்ததால் கள்ள நோட்டுக்களை இந்திய முழுவதும் எளிதாக பரவ விட்டனர். அதனால் சில முஸ்லிம்கள் கடைகளில் பொருள்கள் குறைந்த விலையில் கொடுக்க முடிந்தது. எனவே அங்கு கூட்டம் அதிகரிக்க, அதிக வணிகம் நடந்தது, அதன் மூலம் கள்ளப்பணத்தை எளிதாக இந்தியா முழுவதும் புலக்கத்தில் விட்டார்கள் என்பதை இந்திய உளவுத்துறை கண்டுபிடித்தது.
இதை அறிந்த மோடி தடுக்க வழிகளை ஆராய்ந்தார். இதை ஐநா போன்ற உலக நாடுகளிடம் சொன்னால், உலகம் முழுவதும் நம் கரன்ஸியின் மதிப்பு வீழ்ந்து இந்தியாவே Bankrupt ஆகிவிடும். ஏனெனில் பாகிஸ்தானில் அடிக்கப்பட்ட ₹500, ₹1000 நோட்டுக்களின் தரம் ஒரிஜினல் நோட்டுக்களை போலவே இருந்தது. அதாவது அதே மெஷின், அதே பேப்பர் எனும்போது தரத்திற்கு என்ன குறைச்சல்.
அதற்கு மாற்று வழியை தேடியபோது வேறு வழியே இல்லாமல் போக உதித்த வழிதான் Demonitization. இது மிகவும் சிக்கலான, ஆபத்தான வழியாகும் அதுவரை உலகில் அந்த வழியை நாடிய பல நாடுகளும் அதன் மூலம் பெரும் அழிவை சந்தித்து இருந்ததுதான் அன்றைய வரலாறு. அதில் இந்தியாவின் மோசமான அனுபவமும் நமக்கு இருந்தது. ஆனாலும் மோடி துணிந்து செய்தார், வெற்றியும் ✌️ பெற்றோம்.
இப்போது பாகிஸ்தானின் ஒரு முக்கிய வருமானம் அடைபட்டுப்போனது. அடுத்ததாக பஞ்சாபில் அகாலிதள ஆட்சியில் போதை பொருள் கடத்தல் மிக அதிக அளவில் இருந்தது. அதுவும் பாக்கில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டது, அதை தடுத்ததில் காங்கிரஸ் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கும் ஒரு முக்கிய காரணம்.
அடுத்த பாகிஸ்தானுக்கு தீவிரவாதிகளை ஊக்குவிக்க பணம் கொடுத்த முக்கிய நாடுகளில் சவூதி அரேபியாவும் ஒன்று. அதனிடம் நாம் பெருமளவில் கச்சா எண்ணெய்களை வாங்கி வந்தோம், நாம் கொடுக்கும் அந்த பணமே பாகிஸ்தான் மூலம் நமக்கு எதிராக தீவிரவாதம் செய்ய பயன்படுத்தப்பட்டது. இந்தியா சவூதியயிடம் இந்த உதவியை நிறுத்துக்கள், அப்படி செய்யாவிட்டால் உங்களிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிடுவோம் என்று எச்சரிக்க, ஆடிப்போன சவூதி, அரபு நாடுகளும் பாகிஸ்தானுக்கு நிதி கொடுப்பதை நிறுத்தின. இது பாகிஸ்தானுக்கு பேரிடியாக இருந்தது. 2014 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானின் மீது போர் தொடுத்தால், சீனாவும், சவூதி அரேபியாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக போரில் குதிக்கும் என்ற நிலையில் இருந்து இன்று இந்தியாவின் நட்பு நாடாக மாறியுள்ளது என்பதில் நம் வெளியுறவு கொள்கை மற்றும் அஜித் தோவலின் பங்கு மிகப்பெரியது. இது நடந்ததும் பாகிஸ்தான் வருமானம் வெகுவாக குறைய சீனாவிடம் கையேந்தும் நிலைக்கு பாக் தள்ளப்பட்டது.
அப்போது துருக்கியும், மலேசியாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். அதுவரை மலேஷியாவின் முக்கிய ஏற்றுமதிகளில் பாமாயில் முக்கியமானது. அதை மிகப்பெரிய அளவில் கொள்முதல் செய்த நாடு இந்தியா. எனவே இந்தியா பாமாயில் இறக்குமதியை மலேசியாவிடம் இருந்து வாங்குவதை நிறுத்திவிட்டு இந்தோனேசியாவிடம் வாங்க ஆரம்பிக்க ஆடிப்போன மலேசியா இந்தியாவின் காலில் விழுந்து கதறி மன்னிப்பும் கேட்டது. இந்தியா மன்னிக்கவில்லை, விளைவு மலேசிய பிரதமர் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்டார். உடனே மலேசியா பாகிஸ்தானுக்கு கொடுக்கும் ஆதரவை நிறுத்தியது மட்டுமல்லாம் இந்தியாவோடு போட்டி போடும் அளவிற்கு மலேசியா இல்லை என்றும் ஒப்புக்கொண்டது.
அடுத்து துருக்கி, பாகிஸ்தானுக்கு உதவுவதன் மூலம் முஸ்லிம் நாடுகளின் தலைவர் ஆகலாம் என்று நினைத்தது. இந்தியா துருக்கியின் பரம எதிரியான கிரீஸ் நாட்டுடன் உறவை மேம்படுத்தி, அதற்கு பிரம்மோஸ் போன்ற ஏவுகனைகளை கொடுத்து, துருக்கிக்கு எதிராக ஏவுகனைகளை நிறுத்தியது. ஆடிப்போன துருக்கி, இந்தியா எங்கள் நட்பு நாடுதான் என்று இப்போது காலில் விழ ஆரம்பித்துள்ளது.
அத்தோடு உலகம் முழுவதும் உள்ள நாடுகளிடம், பாகிஸ்தானிடம் நீங்கள் உறவு வைத்துக்கொண்டால், இந்தியாவின் வாணிப உறவை இழக்க நேரிடும் என்ற எச்சரிக்க ஒவ்வொரு நாடுகளாக அதன் பாகிஸ்தான் உறவை குறைத்தது.
அது மட்டுமா, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான பொருளாதார தடைகளை நிறுத்த அதன் ஏற்றுமதி அடிவாங்கியது, வருமானமும் சறுக்கியது. இப்படி பல வகைகளில் வகைகளில் அதனை சுற்றியும் வலையை பின்னிய இந்தியா ஒரு மிகப்பெரும் திட்டத்தை முன்னிறுத்தியது. அதாவது பாகிஸ்தானில் பாயும் நதிகளுக்கு பெரும்பாலும் இந்திய இமயமலை பகுதிகளில் தோன்றி மேற்கில் பாய்ந்து பாகிஸ்தானுக்கு செல்பவையே. அவற்றில் முக்கியமான சிந்து நதியின் கிளை நதிகளான ஐந்து நதிகள், அனைத்தும் தோன்றுமிடம் இந்தியாதான். அதில் இரு நதிகளுக்கு உண்டான நீரை இந்தியாவும், மீதம் உள்ள நீரை பாகிஸ்தானும் பயன்படுத்தி கொள்வது என்பது ஒப்பந்தம். ஆனால் நாம் இதுவரை பயன்படுத்தாததால் நீர் அனைத்தும் பாகிஸ்தானுக்கு சென்றது. இப்போது பாகிஸ்தானின் உயிர் நாடியான சிந்து நதியிலும், மோடி கைவைத்தார். ஆம் அங்கேயும் அணைகட்டி எங்களுக்கு உரிய நீரை நாங்கள் எடுக்கப்போகிறோம் என்று சொன்னதுமில்லாமல், அணை கட்டவும் ஆரம்பித்தார். ஆடிப்போனது பாகிஸ்தான்.
இப்படி பல வகைகளில் உலக நாடுகளில் இருந்து பாகிஸ்தானின் உறவுகளை துண்டித்ததன் விளைவே இன்று பாகிஸ்தான் பிரதமரின் வீட்டை வாடகைக்கு விட்டு பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.
எனவே இது எதுவும் தானாக நடக்கவில்லை, மோடியின் தலைமையில், அஜித் தோவாலின் வழியில் வெளியுறவு துறை மூலம் நடந்தேரியது.
இப்போது சொல்லுங்கள் Demonitization என்பது அவசியமா? இல்லையா? மோடியின் வலுவான ஆட்சியில் மூலம் நாம் நல்லரசாகவும், வல்லரசாகவும் மாறிக்கொண்டுள்ளோம், அதற்கு இந்தியா என்று நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரும் ஆதரவு அளிப்பது அவசியம்! செய்வோம், வெல்வோம்!
🐶
India

No comments:

Post a Comment