Wednesday, December 31, 2014

திரேதாயுக அல்லது கிருதயுக சந்தேகங்கள்:

Posted since 28.12.2014 on my FB wall :

ஒரு கலியுக யதார்த்தவாதியின் யதார்த்தமான அல்லது எதேச்சையான திரேதாயுக அல்லது கிருதயுக சந்தேகங்கள்:
===============================================================
மாதவன் ஸ்ரீரங்கம் ரேஞ்சுக்கு எனக்கு சிந்தனைகள் ஒரு கலியுக யதார்த்தவாதியின் யதார்த்தமான திரேதாயுக சந்தேகங்கள்ளாம் வருதே, இன்னா பண்றது? கத்துண்ட வித்தையெல்லாத்தையும் சேர்த்து வச்சு ஒருக்கா கொட்டில்லாமா? இல்லை அப்டியே கோழிய அமுக்கற மாதிரி உள்ளாரயே போட்டு ஊத்தி மூடிட்லாமா?

பாரதியார்:
மகா கவி பாரதியார் பாட்டு எழுதினார், கவிதை எழுதினார், தேசப்பற்றுடன் தீர்க்கதரிசியாய் பற்பல விஷயங்களை எழுதினார், சிறை சென்றார், சுதந்திர வேள்வியில் பங்குகொண்டார், காந்தி மகான் அவர்களின் சுதந்திரப்போரில் தன் பங்குக்கு தோழர்கள் சுப்ரமணிய சிவா, வ.உ.சி, இன்ன பிற நல்லோர்களின் ஆதரவுடன் தன் பங்கைப் பாங்கே செய்தார்.

அவர் வாழ்ந்த மட்டிலும் அவர் வாழ் நாளில் அவர் சொல்லை யாரும் மதிக்கலை, அவர் சமூகத்திலேயே கூட அவரை யாரும் ஒரு பொருட்டாய் மதிக்கலை என்பார்கள், அவர் குடும்பத்தைக் கூட சரியாகக் கவனிக்கலை, ஏழ்மை அவர்தம் இல்லத்தில் தாண்டவக் கூத்தாடியது என்பார்கள் என்றெல்லாம் நமக்கெல்லாம் பள்ளியில் பாடமாய் சொல்லிக்கொடுத்தார்கள்.

பாரதி மறைந்து கிட்டத்தட்ட 50 வருடங்கள் போனபின் தான் அவர் படைப்புக்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு ஏதோ ஒரு சம்பாவனை காம்பன்சேஷன் என்கிற வகையில் பொன்முடிப்பாக அவர் மனைவிக்கோ குடும்பத்திற்கோ சென்றிருக்கும். பாரதியின் வாரிசுகள் இருந்தார்கள், ஒரு சிலர் பிரபல பாடகராகக்கூட இருந்தார்.

திருவள்ளுவர்:
பாரதிக்கு முன் 2000 ஆண்டுகள் முன் வாழ்ந்த வள்ளுவன் வாசுகி என்று ஒரு ஜோடி சித்தராய் வாழ்ந்தவர் அவர்தம் வரலாறு ஓரளவுக்கு நமக்கெல்லாம் பள்ளிப்பாடம் வாயிலாய் அவர் தந்த உலகப் பொதுமறை திருக்குறள் வழியாய் தெரியும்.

வாழ்ந்தால் வள்ளுவன் வாசுகி போல் கருத்தொருமித்து ஆதர்ச தம்பதிகளாய் வாழணும் என்று பெரியோர் ஆசி கூறுவர்.

வள்ளுவர் சித்தர் போல் வாழ்ந்தார், மனைவி இருந்தும் கிட்டத்தட்ட ஒரு துறவி மாதிரிதான் வாழ்ந்தார்.

வள்ளுவன் வாசுகிக்கு குழந்தைப்பேறு கிட்டியதா? யாராவது அவர்தம் வாரிசு என்று இருந்தனரா? இல்லையெனில் ஏனில்லை?
இருந்தார்களெனில் அவர்கள் என்ன ஆனார்கள்? காலச் சுவட்டில் காலத்தின் ஓட்டத்தில் அவர்கள் மறக்கப்பட்டனரா?

கோவலன் கண்ணகி மாதவி மணிமேகலை:
கோவலன் கண்ணகி கதை சிலப்பதிகாரம் வாயிலாய் நமக்குத் தெரியும்.  கோவலன் மாதவி கதையும் தெரியும், மணிமேகலையும் தெரியும்.  கோவலன் செய்யாத குற்றத்துக்கு தண்டனை பெற்று மாண்டு போக, கண்ணகி கோபத்தில் மதுரையை எரித்த கதை தெரியும்.

அதன் பின் மாதவி என்ன ஆனார்? மணிமேகலை என்ன ஆனார்?

தமிழில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாய் மணிமேகலையும் உண்டு.

வாழ்வியல் ரீதியாய் மாதவியும் மணிமேகலையும் என்ன ஆனார்கள்? ஏதாவது வரலாற்றுக் குறிப்பு உண்டா?

பள்ளிக் கல்வியில் மேற்சொன்ன சந்தேகங்களை தீர்க்கும் பாடங்கள் படித்ததாய் எனக்கு நினைவில்லை.

மக்கழே!! ஸ்டார்ட் மீஜிக்!!

No comments:

Post a Comment