Posted as a Note on my FB Wall since 26.12. 2014
ஒரு சின்னப் பெரிய சந்தேகம், விளக்கம் தேவை (பேஸ்புக்கிலிருந்து ஒரேயடியாக விலக்கம் தேவையா இல்லையான்னு இதுலேருந்தே புரிஞ்சுடும், ஹா........ங்........... நான், என்னைச் சொன்னேன்!!)
தமிழன் தமிழன் என்று சொல்கிறோமே? யார் மெய்யான தமிழர்?
தமிழர்களை வகைப்படுத்தினால் பல வகை உண்டு:
1) தமிழ் நாட்டில் பிறந்துவளர்ந்து தமிழ் பேசி தமிழ் நாட்டிலேயே செட்டிலாகி விட்டவர்கள், மறந்தும் தமிழ் நாட்டைத் தாண்டி அக்கரை செல்லாதவர்கள்
2) தமிழ் நாட்டில் பிறந்துவளர்ந்து தமிழ் பேசி தமிழ் நாட்டிலேயே செட்டிலாகி விட்டவர்கள், சுற்றுலாவுக்காகவோ திருமணம் கருமாதி போன்ற விசேஷங்களுக்காக மட்டும் எல்லை தாண்டியவர்கள் (இந்த எல்லை இந்தியாவுக்குள்ளோ பரதேசமோ எங்கிட்டாவது இருந்து விட்டுப்போகட்டும்)
3) தமிழ் நாட்டில் பிறந்துவளர்ந்து தமிழ் பேசி தமிழ் நாட்டிலேயே செட்டிலாகி விட்டவர்கள், ஆனால் பிழைப்புக்கு வழி தேடி பிற மாநிலம் அல்லது பிற நாட்டுக்குச் சென்று குடியேறிவிட்டவர்கள். ரிடையர்மென்டுக்குப் பின்னர் மீண்டும் தமிழ் நாட்டுக்கு வந்து சாகும்வரை வாழும் உத்தேசம் உள்ளவர்கள். நல்லது கெட்டதுக்கு மட்டும் இங்கு வருபவர்கள் (சுற்றுலா உள்பட).
4) ஆப்ஷன் 3க்கு நேர் எதிர் (50%). அதாவது வெளி மாநிலம் அல்லது தேசத்துக்குச் சென்று விட்டவர்கள், நிரந்தரவாசிகளாய் வெளியிலேயே சாகும்வரை இருக்க உத்தேசமுள்ளவர்கள்.
5) ஆப்ஷன் 3க்கு நேர் எதிர் (100%). அதாவது தமிழும் தெரியாது, பிழைப்பும் இங்கு இல்லை, எனவே இங்கு வந்து செட்டிலாகும் எண்ணம் சாத்தியமில்லை. தமிழ் நாட்டில் பிறந்தது ஒன்றே இவர்களின் தமிழ் நாட்டு லிங்க்.
6) அடிப்படையில் குறைந்தபட்சம் 3 அல்லது 4 தலைமுறையில் முன்னோர் (தாய்வழி அல்லது தந்தைவழி) தமிழ் நாட்டினர். ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாம் வெளி மாநிலம் அல்லது நாடு. ஆனால் தமிழ் பேச மட்டுமே தெரியும். எழுதப்படிக்கத் தெரியாது, தமிழ் நாடு எங்கள் பூர்வீகம் என்று சொல்லிக்கொள்ளும் வாய்ப்புள்ளவர்கள்.
7) ஆப்ஷன் 6க்கு நேரடி எதிர் (50%). அதாவது தமிழ்னாடுதான் பூர்வீகம், ஆனால் இங்கு வசிப்பதில்லை. ஆனால் தமிழ் எழுதப்படிக்கத் தெரியும். நன்கு பேசத் தெரியும். தமிழ் நாட்டு கலை இலக்கிய இயல் இசை நாடக விஷயங்களில் ஆர்வம் உண்டு, பரிச்சயமும் உண்டு, அதன் மூலம் ஒரு தொழில் சார்ந்த வளர்ச்சி வாய்க்கப்பெற்றவர்கள் எனலாம். ஆனால் நல்லது கெட்டது இல்லை சுற்றுலா தவிர தமிழ் நாட்டோடு தொடர்பில்லை. வாழ்வியல் முறையால் தமிழராய் வெளியே வாழ்பவர்கள்.
8) ஆப்ஷன் 6க்கு நேரடி எதிர் (100%): அதாவது பிறப்பால் முன்னோர் வம்சத்தால் தமிழர் இல்லை. எதாவதொரு பிற மானில சார்புள்ளவர்கள். பிற மானிலப் பூர்விகம் எனலாம். ஆனால் தொழில் நிமித்தம் இங்கு வந்து செட்டிலானவர்கள், தமிழ் பேசத் தெரியும் தெரியாது என்கிற பாகுபாடு இல்லை. தமிழ் நாட்டில் வாழ்வதால் இங்குதான் ஜீவிதம் என்கிற நிலையில் உள்ளவர்கள். நல்லது கெட்டது சுற்றுலாவுக்கு மட்டும் வெளியே செல்பவர்கள்.
9) அடிப்படையில் இந்தியரே இல்லை. தமிழ் நாட்டில் வாழ்பவரே இல்லை. ஆனால் தமிழர்தம் நாகரிகம், கலை, இலக்கியம், இயல் இசை நாடகம் இத்யாதி கலாச்சாரங்களினால் ஈர்க்கப்பட்டு தமிழ் நாட்டில் ஏன் இந்தியாவிலேயே வாழ்வதில்லை. ஜீவாதாரம் இங்கு இல்லை. நல்லது கெட்டது சுற்றுலா என்பதுதான் தமிழ் நாட்டோடு இவர்களின் லிங்க். வெளி நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர் வாழ்வியல் முறைகளைக் கடைப்பிடித்து இன மத சாதிக் கோட்பாடுகளை எல்லாம் தாண்டி பண்பாடு கலாசாரம் அதைப் பேணுவது, அதைத் தங்கள் வாழ்வியலாகக் கொண்டு உலகின் ஏதோ ஒரு மூலையில் வாழ்பவர்கள். அதுதான் அவர்களது தமிழ் நாட்டு லிங்க்.
10) ஆப்ஷன் 9க்கு 25% எதிர். அதாவது அதில் குறிப்பிடப்பட்ட அனைத்தும் இவர்களுக்குப் பொருந்தும், ஆனால் இவர்கள் வாழ்வது தமிழ் நாட்டில், செட்டிலானது தமிழ் நாட்டில். சாகும் வரை இருக்கப்போவது தமிழ் நாட்டில்.
11) லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட், மேற்சொன்ன அனைத்தும் (இன மொழி மத சாதி பூர்விக லிங்க் அனைத்தும்) இருந்தும், தமிழ் தெரிந்தும் தமிழ் நாட்டின் மூச்சுக்காற்று கூட பட்டால் பாவம் என்று ஒதுங்கி வெளிப் பிராந்தியத்தில் அல்லது வெளி தேசத்தில் இருப்பவர்கள், முழுக்க முழுக்க தாங்கள் வாழும் நிலத்தின் நாகரிகம் அல்லது கலாசாரத்துடன் ஒன்றிப்போயுள்ளவர்கள்.
யார் உண்மையான தமிழர்கள்? இது ஒரு இமாலயக் கேள்வி!!
அதெப்படி நீ இமாலயக் கேள்வி என்று போடலாம்? அருணாசலக் கேள்வி அல்லது தொட்டபெட்டாக் கேள்வி என்று ஏன் போடலை?
ரொம்ப நோண்டினால் தொட்டபெட்டா தமிழ் நாடா கர்னாடகாவா என்று ஐயப்பாடு வந்துவிடும். நானு ஹேளிது கொத்தாயித்தா?
அருணாச்சலம் லவணியூண்டு பந்துலு சந்துலு ஆந்திரா ராயலசீமாகண்டி சேருலு சந்தேகமுலு!!
வால்பாறை லவலேசம் கேரளம்தன்னே என்று யாரும் பொங்கிட சான்ஸ் உண்டல்லோ?
No comments:
Post a Comment