Posted as Note on my FB wall since 20.12.2014
கல்விப்பாடம் 1:
சங்கீதம் எப்படி என்னை ஆட்கொண்டது என்று பிலஹரிப் பிலாக்கணம் பாடியாயிற்று (இங்கிதம் தெரிந்த அளவுக்குக்கூட சங்கீதம் புரியலை!!)
கல்வி அல்லது படிப்பு என்னை எப்படி ஆட்கொண்டது என்று சிந்தித்தால்.................. (ஒரு 37 ஒளிவட்டம் வெண்மையாய் சிறுகச் சிறுக விரிகிறது, ஒண்ணுமில்லை, .'.ப்ளாஷ்பாக்தான்).
முறையான பள்ளிக்கல்வி முடிந்து கல்லூரி வாசம் கிடைக்கலை. குடும்ப சூழல் என்னை நான் விரும்பிய படிப்பைப் படிக்க (கல்லூரி சென்று) ஏதுவாயில்லாததால் அஞ்சல் வழிக்கல்விதான் வாய்க்கப்பெற்றேன். இள நிலை மற்றும் முது நிலை வணிகம் பயின்றேன். முது நிலையில் தேர்ச்சி பெற இயலவில்லை.
இள நிலை ஒருபுறம் இருக்கும்போதே ஒரு ஆடிட்டர் ஆபீஸில் தணிக்கைத் துறையில் வாய்ப்புக்கிட்டியது. 3 ஆண்டுகள் பயிற்சிக்குப்பின், இள நிலை முடியும் தருவாயில் சி.ஏ. அல்லது ஐ.சி.டபிள்யூ படிக்கும் ஆர்வமென்னவோ ஆழ்மனதில் இருந்தது.
என் ஆடிட்டர் முதலாளியும் துணையாய்த்தான் இருந்தார் என்னை அவ்வழியில் ஊக்கப்படுத்தினார். ஆனால், என் தனிப்பட்ட குடும்ப சூழலில் உழன்று மும்பைக்குச் சென்றேன். ஏதோ மற்றோர் நிர்ப்பந்தமான சூழலில் பெங்களூர் சென்று மீண்டும் நண்பர் உதவியுடன் வேறு ஓர் ஆடிட்டர் ஆபிஸில் சேர்ந்தேன். பின் மறுபடியும் மும்பை வாசம், திருமணம் என்று 2 ஆண்டுகள் சென்றது. பிறகு வாழ்க்கையின் ஓட்டத்தில் மத்திய கிழக்கு நோக்கி நகர்ந்தேன்.
அவ்வளவுதான். மேற்கல்வியைத் தொடர வழி தெரியாமல் பிள்ளைகள், படிப்பு என்று 13 ஆண்டுகள் சென்றது. இடையே மறுபடியும் அஞ்சல் வழியில் ஐ.சி.டபிள்யுவுக்கு விண்ணப்பித்தேன், சில காலம் பின்னர் அதுவும் கை நழுவியது. .'.போகஸ் இல்லாமல் இருக்கும் நிலையை நிலை நிறுத்திக்கொள்வதிலேயே 13 ஆண்டுகள் போயின.

கல்விப்பாடம் 2:
பணிச்சூழலில் நல்ல பெயர் நன்னடத்தை அனைத்தும் இருந்தும், என்னவோ ஒரு ஏக்கம் உள்ளுக்குள்ளேயே இருக்கும். எப்படியாவது இன்னும் இன்னும் மேலே பொசிஷனுக்கு போகணும் என்கிற உத்வேகம் இருந்தது, மார்க்கமில்லாமல் ஒருவிதக் கையறு நிலை அப்போது (1998 2000 வாக்கில்).

இருக்கும் வேலையை தக்க வைக்கவே ராடிக்கொண்டிருக்கும்போது
37 வயதுப் பிராயத்தில் ஒரு ஆத்மார்த்தமான நட்பு வாய்த்தது. பணி நிமித்தம் அவருடன் கலந்தாய்வு ஒருங்கிணைப்புடன் இருக்கும்போது வாழ்க்கைப் பாடம் நிறையப் பெற்றேன். அவர்தம் ஆரம்ப கால வாழ்க்கை, அவர்தம் குறிக்கோள்கள், கால ஓட்டத்தில் அவர் எப்படி எப்படியெல்லாம் நீந்தி எதிர் நீச்சல் போட்டு அன்றுள்ள நிலைக்கு உயர்ந்துள்ளார் என்கிற இன்ஸ்பிரேஷன் கிட்டியது. கூடவே இருவரும் அப்போதெல்லாம் தனியாய் அங்கும் எங்கள் குடும்பங்கள் சென்னையில் இருந்ததால் பணி நேரத்திற்குப் பிந்தைய நேரத்தில் அவருடன் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலாகவோ அவ்வப்போது சிற்சில பொழுதுபோக்கு என்றும் கடந்தது.
எத்தனை நிர்ப்பந்தங்கள், எத்தனை குடும்பக் கஷ்டங்கள், மனக்கிலேசங்கள் இருப்பினும், மேற்கல்வி என்கிற ரீதியில் நம்முடைய சாப்ட் ஸ்கில் எப்படி வளர்த்துக்கொள்ளணும் என்று அவர்தான் எனக்கு 3 வருடங்கள் போதித்தார். சில பல வழிமுறைகளை நான் கைக்கொண்டு 2003ல் சென்னை திரும்பி என் துறை ரீதியாய் ஒரு சர்டிபிகேஷன் கோர்ஸ் படித்தேன். அன்றைய நிலையில் குடும்பச் சூழலில் வேலையை தூக்கிப்போட்டுவிட்டு 13 ஆண்டுகளுக்குப் பின் மொத்தமாய் 20 வருட அனுபவம் கிட்டிய நிலையில் ஒரு புதுப்பாதையில் பரிமளிக்க முதல் 3 ஆண்டுகள் நான் மேற்கொண்ட தியாகங்கள் பற்பல. சகித்துக்கொண்ட விஷயங்கள் பற்பல. பொருளாதார சமூகவியல் சம்பந்தமாக கண்ணுற்ற அனுபவித்த இடையூறுகள் பல. என் வாழ்க்கைத் துணைவி என் கஷ்டங்களில் உடனிருந்தார். துவங்கியது முதலே என் இளைய சகோதரருக்கும் எனக்கும் இருந்துவந்த புரிந்துணர்வு ஒத்துழைப்பு இத்யாதி காரணமாய் புதுப்பாதையில் பீடு நடை போட என்னை நான் ஆயத்தப்பட்டேன்.

No comments:
Post a Comment