Sunday, January 4, 2015

ஒப்பிலா உப்புமா நாமாவளி

Dedicated to Halasyam Sundaram Iyer (FB Friend) Posted by me on FB wall 03.01.2015

நண்பர் ஒருவர் தன் பதிவில் அடிக்கடி தம் முக நூல் பேரறிவாளர்கள் உப்புமா உப்புமா என்று கிண்டலும் கேலியுமாய் இருப்பதாய் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவருக்கு என்னாலான யோசனை இதுதான். இது அவருக்கு மட்டுமா நம் அனைவருக்கும் சரிப்பட்டு வரும்தானே?
ஆடவர் பெண்டிர் என பாலின வித்தியாசமில்லாமல் ஒரு அவசர உணவாகவோ ஆபத்துதவி மெய் கீர்த்தி நல்கும் அசாதாராண முறையிலல்லாமல் வெகுசாதாரணமாகவே நமக்கெல்லாம் ( நேர் மறை பேச்சிலர்களுக்கும் சுற்றுச் சூழல் காரணமாய் பேச்சிலர்களாய் ஆனவர்களுக்கும்) எமர்ஜென்ஸி பசி நிவாரணியாய் இருக்கும் இந்த உப்புமாவுக்கு நான் தரும் விளக்கம்:
உப்புமான்னு சொன்னா இப்படியும் அர்த்தம் கொள்ளலாமே?
தமிழில்:
எல்லாம் வல்ல அந்த ஓப்பிலார் வேந்தன் (உ)ப்பிலியப்பன் (ப்)ரேமையில் (பு)ளகாங்கிதமடைவோமே (மா)தவப் பெரியோனே!!
ஆங்கிலத்தில்:
Universal Protector for Man's Algorithm (read biological or physiological)
(Ladies out there, don't get furious : Not necessarily male-centrist; Human clad always is referred to Man, right?)
ஒப்பிலா உப்புமா நாமாவளி
============================
உப்புமாவைக் கேளுங்கய்யா!! ஹர ஹர சிவனே
உப்புமாவைத் தேடுங்கைய்யா!!!
பரபரவென சடசடவென தயாராகும்
தரதரவெனெ கரகரவென சேர்ந்திசைக்கும்
உப்புமாவைக் கேளுங்கையா!! ஹர ஹர சிவனெ
உப்புமாவைத் தேடுங்கையா!!
கரணம் தப்பினாலும் மரணம் அரிதாகிலும்
சரணம் கூப்பினாலும் சாரணம் எளிதாகிலும்
உப்புமாவைக் கேளுங்கையா, ஹர ஹர சிவனெ
உப்புமாவைத் தேடுங்கையா!!
காய்கனி ஏதுமிலா நள்ளிரவாயினும்
தேய்பனிக் கோருமிலா பள்ளிக்காலமாயினும்
ஓய்பனிச் சாரலிலும் கல்விச்சாலையிலும்
உப்புமாவைக் கேளுங்கைய்யா, ஹர ஹர சிவனே
உப்புமாவைத் தேடுங்கைய்யா!!
பல்கலை வித்தகனாகும் ஆவலிலும்
சொல்பல கற்கும் கற்றபின் விற்கும் தேடலிலும்
ஊழ்வினை அகற்றும் இறைப்பணியாயினும்
தாழ்பணிந்து அவன் தாள் பணிந்து மறைப்பணியாயினும்
உப்புமாவைக் கேளுங்கைய்யா, ஹர ஹர சிவனே
உப்புமாவைத் தேடுங்கைய்யா!!
ஒப்பிலா மாயனின் புகழ் பாடும் வேளையிலும்
தப்பிலா காலனின் பதம் தேடும் வேளையிலும்
கூப்பிடு தூரம் காலன் வருவான் எனும் (அந்தி) மாலையிலும்
சாப்பிட வரம் தந்தாயே, ஹர ஹர சிவனே
உப்புமாவைக் கேளுங்கய்யா!! ஹர ஹர சிவனே
உப்புமாவைத் தேடுங்கைய்யா!!!

No comments:

Post a Comment