This is a continuation in my series of posts under "Discreet Thoughts from Discreet Minds"
Today's topic I have taken up is: "Middle Class Woes, Turbulances & Recovery Phases"
This is 1/3rd in this series more particularly:
நடுத்தர வர்க்க மக்கள் சாதி இன மத சமூக சூழல் இத்யாதிகளை மீறி தம் வாழ்க்கையை வாழ்வதில் ஏற்படும் பற்பல சங்கடங்கள் சொல்லி மாளா.
குடும்பத் தலைவனானவன் தன்னைத் தன் தொழிலில் வேலையில் நிலை நிறுத்திக்கொள்ளவே ஆனான பாடுபட வேண்டியதுள்ளது.
தற்சமயம் நடு வயதில் உள்ளவர்களில் (45 முதல் 55 வயது நடப்பவர்கள்) சுமார் 80 விழுக்காடு சென்னை மாதிரி நகரப் பின்னணி கொண்டவர்கள் அல்ல.
தஞ்சை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை என்று மாவட்டங்களிலும் அதனையிட்டிய பேரூர் சிற்றூர்களில் கிராமங்களில் வாழ்ந்து வளர்ந்தவர்கள்; பெருவாரியானவர்களுக்கு மருத்துவம் இஞ்சினியரிங் என்று தொழிற்கல்வி வாய்ப்பு கிட்டியிருக்காது.
பெரும்பாலும் பி.ஏ, பிகாம், பிஎஸ்ஸி என்று ஒரு பட்டதாரிப் படிப்பு படிப்பதற்கே ததிங்கிணத்தோம் போட்டிருப்பார்கள். வெகு சிலர் கல்லூரிக்குச் சென்று முறையான கல்வி பெற வாய்ப்பு வசதி இருந்திருக்காது. அஞ்சல் வழிக் கல்வியில் மதுரையிலோ அண்ணாமலையிலோ பிற்காலத்தில் வந்த சென்னைப் பல்கலை அஞ்சல்வழிக்கல்வி, பாரதிதாசன் கல்லூரி, இக்னவ் என அழைக்கப்படும் தில்லியிலுள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தெவெளிப் பல்கலைக்கழகம் என்று ஒரு டிகிரியோ முதுகலையோ தாண்டியிருப்பார்கள்.
70 அல்லது 80களில் முதல் வேலை பெறவே சிபாரிசு, சர்வீஸ் கமிஷன் பரீட்சை, பி எஸ் ஆர் பி எனும் வங்கிகளுக்கான பரீட்சைகள், ஆர்.பி.ஐ. என்று எம்ப்ளாய்மென்ட் ந்யூஸ் பார்த்து டி என் பி எஸ் சி அல்லது யு பி எஸ் சி, பொதுத்துறை நிறுவனங்களில் வேலை கிடைக்கவே படாத பாடு பட்டு வேலையில் செட்டிலாகவே ஒரு 10 வருடம் ஆகியிருக்கும்.
இடையில் தத்தம் ஊர்விட்டு பறந்துபோய் மும்பை, தில்லி, கொல்கத்தா, பெங்களூரு என்று பிற மாநிலங்களிலோ வளைகுடா நாடுகள், அல்லது சிங்கப்பூர், மலேசியா என்றோ சென்றிருப்பார்கள்.
மிகச் சிலரே முதல் முயற்சியிலோ பின் இந்தியாவில் செய்த தொழிலின் அனுபவப் பின்னணியிலோ வெளி நாட்டு வேலைக்கு போயிருப்பர்.
சிலர் செட்டிலான வேலையை விட்டுவிட்டு மேற்படிப்பு, எம்.பி.ஏ. என்று மேலாண்மைத் துறையிலோ நவீன பாணி தகவல் தொடர்புக் கல்வியிலோ (ஐ.டி) பரிச்சயம் கொண்டு அந்த அனுபவத்தில் சர்டிபிகேட் கோர்ஸ்கள் படித்து 40 வயதுக்குமேல் தான் வாழ்க்கையில் ஒரு மாற்றுப் பாதையை கண்டிருப்பார்கள்.
இதற்கிடையே, திருமணம் என்று ஒன்று ஆகி குழந்தைகள் பெற்று வளர்த்து அவர்கள் ஆரோக்கியம், கல்வி வளர்ச்சி என்று பல்வகை செலவினங்கள், வீட்டில் முதியோர் இருந்தால் அவர்தம் பராமரிப்பு, மருத்துவ செலவுகள், கூடவே குடும்பத் தலைவன் காலப்போக்கில் தனக்கே வந்திருக்கக் கூடிய நோய் நொடி, இருதய நோய், சர்க்கரை நோய், புற்று நோய் என்று ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதச் சங்கடங்கள், கஷ்டங்கள்.
இந்தமாதிரி நடுத்தர வயதில் உள்ள பெற்றவர்கள் தங்கள் வாழ் நாளில் சுக துக்கங்களை அனுபவித்திருந்தாலும், சுகம் என்பதை விட உற்றம் சுற்றம் நட்பு வட்டம் என்று அனுசரிப்புடன் அரவணைப்புடன் கூடவே தேவைப்படின் பொருளாதார நிதித் தேவைகளுக்கு பரஸ்பர உதவி நல்கி வாழ்ந்தவர்கள் ஒரு புறம் என்றால் இந்த மாதிரி பொருளாதார நிதி ஆதாரங்களுக்குயாரையும் எதிர்பாராமல் சுய சார்புடனே வாழ்பவர்கள் அபூர்வம்.
(To be continued)

No comments:
Post a Comment