Sunday, January 4, 2015

Facebook - some thoughts based on TOI News item 03.01.2015

அடி ஆத்தி, இதைக் கேளுங்கப்பு!!
முக நூல் இல்லே, முக நூல், அதாங்க ஏதோ ஃபேஸ்புக்காமே, ஃபேஸ்புக் அதை வருஷத்துல ஒரு நாளைக்கு ஊத்தி மூடணுமாம், அப்பத்தான் இதோட அருமை பெருமை மக்களுக்குப் புரியுமாம்!! சொல்லுறாகப்பு!!
யார் சொல்லுறாக!! அதாங்க, இந்தக் கருமத்தக் கண்டுபிடிச்சதா சொல்லிக்கிட்டு திரியறாரே, மார்க்காமே சுகர்பேகாமே, என்னவோ போ, பேகோ மஞ்சப்பையோ, அவரு வருஷா வருஷம் ஒரு கூட்டம் கூட்டுவாராம், அதுல வந்துருக்கற மகா ஜனங்ககிட்ட கேப்பாராம்!!
நாம மேற்கொண்டு இன்னா பண்ணலாம், எப்படியெல்லாம் இதை ஃபேஸ்புக்கை முன்னேத்தலாம்? இதுனால மக்களுக்கு இன்னா பலன் கெடைக்கீது, மக்களாங்கட்டி இன்னா சொல்றாங்க, திட்டறாங்களா, மக்கள் நல்லா பொழுதுபோக்கறாங்களா இப்படி நம்மளோட பல்ஸ் அதாங்க ஃபீட்பேக் கேப்பாராம். மக்கள்னா பொதுமக்கள் இல்லே, அவரோட கொம்பெனி ஆட்களுக்க்குத்தான் இந்தச் சான்ஸ்.
அதுல ஒரு ஆளுதான் இதுமாதிரி ஐடியா குடுத்துக்குறாப்ல, வருஷத்துல ஒரே ஒரு நாள் இழுத்து மூடிட்டு போங்க!! அப்பாலிக்கா இந்த ஒலகம் முச்சூடும் இருக்கற மக்கா அந்த நாளைக்கு என்னா பண்ணுவாங்க? என்னால்லாம் பண்ணலாம் ? அப்பிடின்னு ஐடியாவெல்லாம் வருதாம். அல்லாத்தையும் கண்டுக்கினு நம்ம மார்க் ஒரு முடிவு எடுப்பாராம். அதாங்க மேட்டரு?
இதை நான் சொல்லல்லீங்கோவ்!! இதோ கீழே இருக்குதே அதை க்ளிக் பண்ணுங்கோ, அல்லாம் உங்களுக்கே பிரியுமுங்கோவ்!!
மார்க் தனக்கே மார்க் போட்டு பாஸா பெயிலான்னு பாக்கறாரா? ஒரு நாளைக்கு ஊத்தி மூடிட்டு கல்லால விளம்பரம் அது இதுன்னு வந்து கொட்டுதே அது எம்பூட்டு கொட்டும் இல்லை நஷ்டக் கணக்கு அந்த ஒரு நாளைக்கு அப்பிடின்னு பல்ஸ் பாக்குறாரோ?
அப்பத்தான் தெரியுமுங்கோவ், இவுரு மார்க் வாங்கினாரா இல்லையா?
இவர் மெய்யாலுமே சுகர்பெய்கா ? சுகர் கோட் பண்ணிய பேக்கான்னு?
படிங்க, தெளிங்க, வெவரமா இருந்துக்கோங்க!!
(இதெல்லாம் ஏன் இப்படி யோசிக்கறாய்ங்க? நாமதான் முதல்லேருந்தே திண்ணைப்பேச்சு, ஊர் எல்லைல கட்டி வச்சுருக்காங்களே முச்சந்தி முக்கூட்டு குட்டிச்சுவரு, அதுல உக்காந்து நம்மளோட டயத்த அவ்ளோ வேஸ்ட் பண்றோம்னு?
இவரே புச்சா ஒண்ணு குடுப்பாராம், நம்மள இப்பிடி பிம்பிளிக்கி பிளாக்கின்னு பிணாத்த விடுவாராம், பின்னாடி இவரே ஒரு கதை கட்டிவிடுவாராம், நம்ம மக்கள்கிட்ட ஓட்டம் விட்டு ஒட்டுக்கேட்டு 'அடிங்கப்பு, ஏன்டா முக நூல் முக நூல்னு காலத்தே வேஸ்டா ஓட்டறீங்க? போய் புள்ளக் குட்டியப் படிக்க வைங்கப்பா'ன்னு இவரே யார் மூலமாவோ தூதுவிட்டு நம்மள வெரசா விவரமா இருக்கச் சொல்ல அட்வைஸ் பண்ணுவாராம்!!
என்னவோ போங்க!! நான் மட்டுமே இப்பிடி பிணாத்திக்கிட்டு கெடக்கேன்? என்னைப் போல் எத்தனை பேர் இப்படி இருக்காங்க ஒலகம் ஃபுல்லா?
இதோட அப்ரோச் எப்பிடி போகுதுன்னூ நான் யூகிச்சது என்னான்னா, மாத சந்தா இல்ல வருஷ சந்தா அப்பிடின்னு ஒரு சார்ஜ் போடலாமே? நமக்கும் (மார்க்குக்கு) சந்தாங்கற பேர்ல கல்லா கட்டலாம்? இல்லேன்னா, எத்தனை பேர் ஊத்தி மூடிட்டு சந்தா கட்டாம இதுலேருந்து போறாங்கன்னு பாப்பமே? அப்பிடின்னு யோசிச்சதால வந்த ஐடியாவாவும் இருக்கலாமே?
நூத்துக்கு 30 பேர் போனாக்கூட பாக்கி 70 பேர் இத்தனை நாளா காசு கட்டாம யூஸ் பண்ணினாங்க? 30 பேர் போனாலும் 70 பேர்ட்ட காசு பாத்தா இன்னும் கூடவே டைரக்டா கல்லா கட்டலாமே?
எப்புடி, ஒரு கல்லுல ரெண்டு மாங்காயா? மூணு மாங்காயா?
எப்புடி, நம்ம சுகர் பேக் அண்ணாச்சியோட வியாபார தந்திரம், வெளங்கிச்சா? பஞ்சாயத்து, என்ன, நான் சரியாப் பேசறேனா?

If the customer is always right, then Facebook boss Mark Zuckerberg needs to consider shutting down the social media giant for one day a year.
TIMESOFINDIA.INDIATIMES.COM
Like · 

No comments:

Post a Comment