Thursday, January 29, 2015

How to express yourself - social media dilemmas?



Socially expressing yourself - dilemmas:

We get ideas, themes and topics to write about. Facebook, Twitter etc. provide ample opportunities to express yourself. Some people chose to pen their thoughts in the form of personal blogs in various websites that are freely available (such as this one for instance or wordpress etc.).

In Facebook or Twitter, it works differently.  Ideally you should not post more than 5-10 lines of text as a status post on your timeline.  The more the text or information you share, the less is the chance of getting attention by your reader community, viz. your circle of friends, acquaintances and so on.

You may be member of so many Facebook groups, but as long as you don't express yourself brief and precise, nobody is reading the content and your message is NOT sent across.


I have personally experienced this many a times. Many people complained to me as if I am writing long posts, even during commenting on someone's post.

When it comes to writing something, choice of language is a main concern here.You may be very well conversant in English or mother tongue or many more languages. You may be getting ideas to express in mother tongue, but the auidence expectation would be in English due to their own situations like: they don't know your language; they don't want to read long posts whatever language your posts might be in; psychologically nobody has the luxury of time to spare to read long posts.

As long as you are precise and short, your posts would be read by all and sundry. Leave aside the response you get, you are blessed if you few likes and comments, so you get an impetus to write more and more.

If you are comfortable in English and write in that language, many of your friends' circle would prefer you to write in your mother tongue that they share with you.  In this case, your English-preferring friends cannot read, so again, your message is NOT sent across.

If you choose to write in your personal blog and provide a link in Twitter or Facebook for instance, then your job ends there.  It is upto the audience to take it or leave it.  For you, you had something to say, you had something to express on certain topic of interest; you may be writing out of sheer passion on any faculty of thoughts or school of thoughts, be it politics, religion, spiritualism, science and technology, health, social life, interpersonal relationship issues, your own views on so many research topics that might be of anyone's interest, educational aspirations, educating someone. It can be any faculty that you are willing to express yourself, but, you need to get suitable audience to read your blogs.

(to be continued).
 

How to express yourself trouble-free - workplace dilemmas? (2)

Many a times during office interactions and internal workplace meetings, you get ideas to share.

You may be asked to conduct an investigation about a specific issue that's burning and hot-topic in the office that affects your company or group or department for that matter, it can be anything.

You would put all your efforts and burn your midnight oil and provide a lengthy analysis and submit to your higher ups in the corporate ladder, who have sought such report.

Here you are facing a typical 'Catch-22' situation.  The receiver of your report calls you into his cabin and tells you 'Mr. ........(so and so), I went through your report. I can see you have taken lot of pain, and effort to compile this.  I appreciate your way you have compiled this.  But, the management has no luxury of time to read through several pages of reports. They want you to give a precise report in short, quickly narrating the problem and your analysis plus your recommended ways of issue resolution, that's all. Don't waste your time, you know time is precious for all of us in this company.  Go and get me a brief report'.

What you would do? You think for yourself.

You know you have spent enormous time and valuable energy into this investigation; you have spoken to those whom it may concern at every level of your management, functional or operational or administrative hierarchy and finally after analysing the issue thoroughly you have come up with your feedback in the form of a report, that you are asked to deliver.

It's up to the top stalwarts sitting out there, to go through by themselves or thru their personal secretaries to get the crux of it. You have done your part by furnishing the much needed analysis through your studious work.

If the management does not have time to read long reports, it's sheer atrocious and ridiculous for them to ignore and choose NOT TO read it by themselves.  If they want, they can ask their secretaries to go through the report and submit a summary of your contentions. There is a limitation or negative sting attached to it.  By going through your report, the secretary might have his/her own contentions, or if you were NOT in that secretary's or his boss's good books for any reason, that secretary can manipulate information to the best interests of him/her and project a totally different picture to the management than what you have originally averred in the first place.

This is what happens in public sector including governmental departments in the form of bureaucratic setups (viz. red tape).

On one side, your message is NOT reaching the right decision-makers or stakeholders. They get the opposite feed because they asked their secretaries to read through your reports under the pretext that they as top brass stalwarts have other compelling reasons that are keeping them preoccupied so they cannot spend ample time to go through your reports by themselves.

Had they taken enough time to read it for themselves, they can get a direct feedback of your message clearly.  There is another dimension to it.  What if you are NOT in the good books of the top brass themselves; if at all they read your report and find out that it is not in the best interest of them and they realize their near and dear Chamchagiris would be impacted or affected, that's it, your report would go to dustbin.   If they don't themselves take the pain of reading and delegate the task to their personal secretaries, the secratary might be aware of your situation that you don't do well with his/her boss; so the secratary take you for a ride, and your reports get manipulated and your message is again NOT sent across to those it may rightfully concern.

(to be continued)

How to express yourself, trouble-free? Workplace Dilemmas (1)

How to express yourself trouble-free?

Many a times, we get ideas, topics or themes or situations where we feel like expressing ourselves to outside world.

Be it your workplace, home, circle of friends or social media or whatever circumstances you are in, you know you have something to say, but you are in a dilemma like these:

Workplace dilemmas:
In current main-stream mechanical or materialistic world, at work place in any given industry, public or private enterprises, MNCs, Body Corporates or any place on earth for that matter, you get chances to express yourself concerning a problem or issue relating to your job or profession.

It might even be a subject where you need to express in an interactive meeting - in a conference room or board room meeting - but due to work place ethics and time constraints, the meeting organizer or powers-that-be might not give you leverage to take on the mantle of expressing outwardly, with a view NOT to deviate from the topic or agenda of the meeting where it is called for; not to entertain unnecessary display of 'exhibitionism of talent or skills' that would otherwise would benefit the corporate or company, however, in order to curtail your thought process from getting your message sent across, you might be stopped abruptely and you don't get a chance to explicitely convey what you have in mind.

The funny part is before or after every meeting agenda, the organizer would call for questions at the end of the meeting, as if to show they are giving opportunity to talk but their idea behind keeping the Q&A session, towards the fage end of the meeting is: they fully are aware it's only a formality to show off the management is giving a chance for staff or employees to say what they have to say, however, they have their privilege and liberty, with the excuse that 'we don't have the luxury of time, we cannot discuss anything further. Thanks for your time, anyone has any concerns, please share your ideas or concerns, offline, and we would take it then forward suitably' sort of.

If you choose to express yourself offline to powers-that-be, however they realize you are right in principle in sharing what you have in mind; however they realize you have a genuine concern on the organizational interest so you are sharing your thoughts there, still, they don't entertain further dialogue.  Many corporate managements would instead take you up and take you seriously in that 'they ensure to sideline you for future meetings by not inviting you to such meetings because they fully know you might have your own agenda to talk about' OR, worst case, they make every effort to keep you in dark with whatever developments and they end up avoiding you per se.

Some may even take this route. They take your ideas, and freely implement them as if it is theirs and take credit in front of top management and you have no clue of what's happening and you end up losing morale.  Unless you as an employee or individual have the wherewithal to withstand workplace problems, tackle interpersonal relationships to the next level by avoiding upfront confrontational aspects and unless you know how to engage yourself regardless the reaction or counter-reaction for your deeds.  If you must be studious and shrewd enough to by pass all and go and get along with higher-ups with your sheer manuevering techniques, you may survive and go up and up in the corporate ladder.  If you don't do anything and if you don't know how to manage the show, it's either you end up stagnant in the same space if you are not capable of marketing yourself or enhancing your capabilities and skillset suitably to allow and facilitate yourself to improve your personal profile and get yourself the required impetus and boost to grow further in your career, either in the same organization or elsewhere.  As long as you don't endeavor to do so, you are lost.


(to be continued).

Friday, January 23, 2015

Middle Class Woes, Turbulances & Recovery Phases (3)

This is a continuation in my series of posts under "Discreet Thoughts from Discreet Minds"

Today's topic I have taken up is:  "Middle Class Woes, Turbulances & Recovery Phases"

This is 3/3rd in this series more particularly:இந்த உழைப்பு வீணாகக் கூடாது.

ஏற்கெனவே 1967க்குப் பின்னர் தமிழ் நாட்டில் சமூக அரசியல் சூழல் தமிழ் நாட்டில் வாழ்பவர்களுக்கு, குறிப்பாக நடுத்தர மற்றும் கீழ்த்தர வர்க்கத்தினருக்கு (பொருளாதார ரீதியாக மட்டுமே பின் தங்கியவர்களை இங்கே குறிப்பிடுகிறேன்). இன மத ரீதியாக தாம் பின் தங்கினோம், எங்களுக்குத் தான் முன்னுரிமை என்று கோரிக்கை வைத்து பிற்கால ஆட்சியாளர்களின் தயவால் தம் வாழ்க்கையில் முன்னேறியவர்கள் தம் சமூகத்தில் இன்னமும் கீழேயே இருப்பவர்களைத் தூக்கிவிட ஒரு துரும்பையும் எடுத்துப் போட்டது கிடையாது.

மேற்சொன்ன பொருளாதார ரீதியில் பின் தங்கிய கீழ் மற்றும் நடுத்தர வர்க்கம் அன்றும் இன்றும் காலாகாலத்திற்கும் ஏறிவரும் விலைவாசி, பணவீக்கம், என்று இந்தச் சுழலிலேயே சிக்கித் தவித்து என்றுமே மேலே உயர முடியாமல் மேல்தட்டு நடுத்தர வர்க்கமாய் பரிணமித்துள்ளனர்.

இடையே மேல் நாட்டு மோகத்தில் எப்படியோ பிழைத்துப் போய் மத்திய கிழக்கு நாடுகள் அல்லது தூரக் கிழக்கு நாடுகளுக்குச் சென்று தம்மை வளர்த்துக்கொண்டவர்கள் தம் வாழ்வில் வசந்தம் வரும், முந்தைய தலைமுறையினர் பட்டம் கஷ்டம் விடியும் என்று காத்திருந்தவர்கள், காத்திருப்பவர்கள் அதிகம்.

அடுத்த தலைமுறை குழந்தைகள் ஆசைப்பட்ட படிப்பு படிக்க வைக்க பொருளாதார ரீதியில் ஒரு வழி மேற்கொண்டு நிதி நிர்வாகம் சரியாகச் செய்து உதவ தயாராய் இருந்தாலும் வேறு சில காரணங்களால் இடையூறுகள் வரும்போது அவற்றுக்கான தீர்வு நம் கையில் இல்லை எனும் நிலையில் இந்த நடுத்தர வர்க்க தகப்பனின் கஷ்டங்கள் இருக்கே, சொல்லி மாளாது.

As parents we undertake so many steps and measures to overcome our problems, issues and such eventual middle class woes, face turbulent moments and do endeavor our best to address such issues with a view to arrive at a logical resolution with all our strength, means and wherewithal.
However,when we send our wards abroad for high education, OR, when we ourselves want to pursue overseas employment, we face so many issues in visa and consular services to obtain a valid visa (work visa or student visa etc.).
Every now and then, visa regulations are constantly changing with evolving socio-cultural scenarios, threats including anti-social elements-oriented problems like extremism and terrorism so country to country, new rules, terms and conditions come into play.  This leads to stricter implementation of procedures, modified rules and guidelines where our efforts as an applicant goes to sky high where we need to exert lot of pressure, spend enormous time and efforts to get things done at every faculty of administrative or operational facets of every office on the go. However you are ready to take on and handle the stress and pressure,many a times you reach a point of no return, that’s beyond one’s comprehension and control.

ஒருபுறம் தான் தன் தொழில் என்று நிலை நிறுத்திக்கொள்ள போராட வேண்டியதுள்ளது.


மறுபுறம் அடுத்த தலைமுறைக் கல்வி என்கிற பெரிய பொருளாதார நெருக்கடி.

மறுபுறம் தம் கட்டுப்பாட்டில் இல்லாத சமூகக் காரணிகளால் ஏதும் செய்யவொண்ணா கையாலாகாத்தனம்.

என்னதான் ஒவ்வொரு பிரச்சினைகளிலும் அதனதன் ஆணிவேர் புரிந்து எஸ்கலேஷன் என்று முயற்சி செய்தாலும் வரக்கூடிய தீர்வுகள் நாம், நமது பிள்ளைகளின் கல்வி தொடர்பான குறிக்கோள்கள், இதனால் ஏற்படும் கால தாமதம், கால விரயம் என்று ஒரு விதக் குழப்ப நிலை.

கூடவே காலகாலமாய் பற்பல தியாகங்கள் சகிப்புத்தன்மையின் மொத்த உருவமாய் இந்த நடுவர்க்கப் பெற்றோர். அவர்கள் தங்களுக்கான குடும்பச் சூழலில் சேர்ந்து வாழும் சூழல் அரிதாகியிருக்கக் கூடும். வெகுசில பெற்றோரே திருமணம் முதல் இறுதிவரை சேர்ந்து வாழும் பாக்கியம் பெறுகிறார்கள்.

சிலருக்கு இந்த பாக்கியம் கிட்டாமல் தலைவன் ஓரிடம் தலைவி ஓரிடம் என்று பிரிந்திருப்பார்கள்.

குழந்தைகளைப் பெரும்பாலும் தலைவியின் பொறுப்பிலோ பெரியோரின் பொறுப்பிலோ விட்டுவிட்டு தொழில் ரீதியாய் தலைவன் ஊர் ஊராய் நாடு நாடாய் அலைந்திருப்பான்.

நடுவயது வந்ததும், ஒரு புறம் குழந்தைகளின் கல்லூரிப் படிப்பு, மேற்படிப்பு என்கிற நிர்ப்பந்தங்கள், மறுபுறம் தமக்கே உரிய மருத்துவச் செலவு உடல் உபாதை சங்கடங்கள், வைத்தியச் செலவினங்கள் என்று மனவியல் ரீதியாய் இந்த நடூத்தர வர்க்கத் தகப்பன் அல்லது தாயானவள் அனுபவிக்கும் சங்கடங்கள், குழப்பங்கள்.

அத்தகைய நடுத்தர வயதுப் பெற்றோர் நடுவயதில் மட்டுமே உணரும் 'விட்ட குறை தொட்ட குறை உடல், மனோ ரீதியான ஏக்கங்கள், பிரிந்து வாழ்ந்ததனால் நிராகரிக்கப்பட்ட வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகாமலேயே முதுமையை நோக்கிய பயணம் என்று முதுமையின் தலைவாசலில் அடியெடுத்து வைக்கும் சூழல்.

இந்தமாதிரி சங்கடங்கள் எந்தக் காலத்திலும் எல்லா வகை பெற்றோருக்கும் எந்தச் சமூகத்திலும் இருக்கும் தான். முன் தலைமுறையை விட இந்த நடுத்தர வர்க்கம் தற்சமயம் 45‍ முதல் 55 வரை உள்ளவர்கள் அடுத்த தலைமுறைக்கு ஒரு நல்வழி காட்ட தத்தம் முயற்சியில் ஏதோ முனைகிறார்கள், சிலர் வெற்றி பெறுகிறார்கள், சிலர் தோல்வி அடைகிறார்கள். சிலர் வெற்றி தோல்வி இலக்கின்றி ஏதோ நடைபோடுகிறார்கள். முடிவு இயற்கையின் போக்கில் அல்லது இறைவன் காட்டிய வழியில்!!

As parents, we need to comprehend to ground realities at every walk of life, be it our workplace or government or private authorities or agencies, and adjust to scenarios and situations that takes our toll to a great extent.
Exerting and exercising restraint at every such eventual turbulent moments, exploring all opportunities to overcome and find resolution to problems on the go, and thus ensure we or our wards do not encounter any issue in our endeavors is a great challenge, indeed !!

Just thought of sharing my views out of my personal experiences thus far.

Each of us as a parent, would endure and undergo such problems and face eventual issues and circumstances. How best we resist temptation to behave unduly and unfavorably at such situations, show diplomacy and decency with utmost patience and perseverance is a million-dollar worth trait that we as parent must display!!

Bottom-line what I wanted to say is:

When you think of overseas education, please deal with authorized agencies or institutions.

Choose a university that's reliable, durable and has long standing history of academic excellenceand reputation.

For info, certain Universities from Australia and New Zealand and some UK universities opened their shop in Singapore during 2000-2010 but few of them had to close the shop as there were allegations of misconduct, illegal operations or it was found they were following ridiculous operative procedures and SOW (SOP)whatever.

End of the day,affected or aggrieved students had no option but switch to another university elsewhere. What they paid as fees is gone, sheer loss, to the parents.

I heard few Universities in UK or US are also not that worthy, they only make road shows and seminars in India in various hotels and locations where anxious Indian parents get carried away by sheer speeches and end of the day, they are lured into peril, bottom line, lose money, time and efforts everything goes waste for both students and parents.

Pls beware of your decisions, choose the right university and course, for the betterment of the ward.

(Concluded).

Middle Class Woes, Turbulances & Recovery Phases (2)

This is a continuation in my series of posts under "Discreet Thoughts from Discreet Minds"

Today's topic I have taken up is:  "Middle Class Woes, Turbulances & Recovery Phases"

This is 2/3rd in this series more particularly:

இந்தப் பெற்றவர்களுக்கு இயல்பாகவே ஒரு எண்ணப் பாங்கு ஏற்பட்டிருக்கும்.

தம் இளமைப் பருவத்தில் அது படிக்கணும் இது படிக்கணும் என்று ஆசைஇருந்திருக்கும். ஆனால் (முன் தலைமுறை) தத்தம் பெற்றோரின் குடும்பச் சூழல், வருமானமின்மை,பொருளாதார நிதி ஆதாரம் இன்மை என்று பற்பல சூழல்களில் தத்தம் குறிக்கோளை தியாகம் செய்துவிட்டுகிடைத்த வேலையைச் செய்து சிறுகச் சிறுக முன்னேறியிருப்பார்கள்.

இதற்கு அவர்களுக்கு கைகொடுத்த கூடுதல் தொழில் நுட்ப டிப்ளமோக்கள்,டைப்ரைட்டிங் (தட்டச்சு), ஷார்ட் ஹான்ட் (சுருக்கெழுத்து), தனிப்பட்ட முறையில் இந்திபடித்திருந்தால் அந்தப் புலமை கூடவே பி ஏ, பி காம் மாதிரி படிப்பு படித்திருந்தால்அதுவும்தான் இந்த நடுத்தர வர்க்கத்தின் தொழில் மூலதனமாய் இருந்தது (60‍ 70 களில் பிறந்தவர்களுக்கு).

இந்தப் பின்னணியில் வளர்ந்தவர்கள், கஷ்டப்பட்டு குடும்பத்தை கட்டிக்காக்கவும்பேணிக்காக்கவும் தம் அடுத்த தலைமுறையினர் தன்னை மாதிரி கஷ்டப்படக் கூடாது. நிர்க்கதியாய்நிற்கக் கூடாது என்கிற சிந்தனையில், அதாவது, நாமதான் நல்ல கல்லூரி, பட்டப் படிப்புபடிக்கலையே, நம் குழந்தைகளையாவது படிக்க வைக்கலாம், அதற்காக எப்பாடு பட்டாவது பொருளாதாரநிதி ஆதாரங்களைத் தேடும் முயற்சிகளில் இறங்கியிருப்பார்கள்.
அதற்காக தாம் வாழும் சூழலில் கடனோ உடனோ வாங்கி அண்டா குண்டா அடகுவச்ச காலம் போய் நகைகள் வெள்ளி இத்யாதி இருந்தால் சொத்து பத்து இருந்தால் அவற்றை அடகு வைத்துத்தான் இந்த நடுத்தர வர்க்கம் அடுத்த தலைமுறைக்கான கல்வி ஆதாரம் வேண்டி உழைக்கிறது.

இந்தஉழைப்பு வீணாகக் கூடாது.

(To be continued)..........

Middle Class Woes, Turbulances & Recovery Phases (1)

This is a continuation in my series of posts under "Discreet Thoughts from Discreet Minds"

Today's topic I have taken up is:  "Middle Class Woes, Turbulances & Recovery Phases"

This is 1/3rd in this series more particularly:
நடுத்தர வர்க்க மக்கள் சாதி இன மத சமூக சூழல் இத்யாதிகளை மீறி தம் வாழ்க்கையை வாழ்வதில் ஏற்படும் பற்பல சங்கடங்கள் சொல்லி மாளா.

குடும்பத் தலைவனானவன் தன்னைத் தன் தொழிலில் வேலையில் நிலை நிறுத்திக்கொள்ளவே ஆனான பாடுபட வேண்டியதுள்ளது.

தற்சமயம் நடு வயதில் உள்ளவர்களில் (45 முதல் 55 வயது நடப்பவர்கள்) சுமார் 80 விழுக்காடு சென்னை மாதிரி நகரப் பின்னணி கொண்டவர்கள் அல்ல.

தஞ்சை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை என்று மாவட்டங்களிலும் அதனையிட்டிய பேரூர் சிற்றூர்களில் கிராமங்களில் வாழ்ந்து வளர்ந்தவர்கள்; பெருவாரியானவர்களுக்கு மருத்துவம் இஞ்சினியரிங் என்று தொழிற்கல்வி வாய்ப்பு கிட்டியிருக்காது.

பெரும்பாலும் பி.ஏ, பிகாம், பிஎஸ்ஸி என்று ஒரு பட்டதாரிப் படிப்பு படிப்பதற்கே ததிங்கிணத்தோம் போட்டிருப்பார்கள். வெகு சிலர் கல்லூரிக்குச் சென்று முறையான கல்வி பெற வாய்ப்பு வசதி இருந்திருக்காது. அஞ்சல் வழிக் கல்வியில் மதுரையிலோ அண்ணாமலையிலோ பிற்காலத்தில் வந்த சென்னைப் பல்கலை அஞ்சல்வழிக்கல்வி, பாரதிதாசன் கல்லூரி, இக்னவ் என அழைக்கப்படும் தில்லியிலுள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தெவெளிப் பல்கலைக்கழகம் என்று ஒரு டிகிரியோ முதுகலையோ தாண்டியிருப்பார்கள்.

70 அல்லது 80களில் முதல் வேலை பெறவே சிபாரிசு, சர்வீஸ் கமிஷன் பரீட்சை, பி எஸ் ஆர் பி எனும் வங்கிகளுக்கான பரீட்சைகள், ஆர்.பி.ஐ. என்று எம்ப்ளாய்மென்ட் ந்யூஸ் பார்த்து டி என் பி எஸ் சி அல்லது யு பி எஸ் சி, பொதுத்துறை நிறுவனங்களில் வேலை கிடைக்கவே படாத பாடு பட்டு வேலையில் செட்டிலாகவே ஒரு 10 வருடம் ஆகியிருக்கும்.

இடையில் தத்தம் ஊர்விட்டு பறந்துபோய் மும்பை, தில்லி, கொல்கத்தா, பெங்களூரு என்று பிற மாநிலங்களிலோ வளைகுடா நாடுகள், அல்லது சிங்கப்பூர், மலேசியா என்றோ சென்றிருப்பார்கள்.

மிகச் சிலரே முதல் முயற்சியிலோ பின் இந்தியாவில் செய்த தொழிலின் அனுபவப் பின்னணியிலோ வெளி நாட்டு வேலைக்கு போயிருப்பர்.

சிலர் செட்டிலான வேலையை விட்டுவிட்டு மேற்படிப்பு, எம்.பி.ஏ. என்று மேலாண்மைத் துறையிலோ நவீன பாணி தகவல் தொடர்புக் கல்வியிலோ (ஐ.டி) பரிச்சயம் கொண்டு அந்த அனுபவத்தில் சர்டிபிகேட் கோர்ஸ்கள் படித்து 40 வயதுக்குமேல் தான் வாழ்க்கையில் ஒரு மாற்றுப் பாதையை கண்டிருப்பார்கள்.

இதற்கிடையே, திருமணம் என்று ஒன்று ஆகி குழந்தைகள் பெற்று வளர்த்து அவர்கள் ஆரோக்கியம், கல்வி வளர்ச்சி என்று பல்வகை செலவினங்கள், வீட்டில் முதியோர் இருந்தால் அவர்தம் பராமரிப்பு, மருத்துவ செலவுகள், கூடவே குடும்பத் தலைவன் காலப்போக்கில் தனக்கே வந்திருக்கக் கூடிய நோய் நொடி, இருதய நோய், சர்க்கரை நோய், புற்று நோய் என்று ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதச் சங்கடங்கள், கஷ்டங்கள்.

இந்தமாதிரி நடுத்தர வயதில் உள்ள பெற்றவர்கள் தங்கள் வாழ் நாளில் சுக துக்கங்களை அனுபவித்திருந்தாலும், சுகம் என்பதை விட உற்றம் சுற்றம் நட்பு வட்டம் என்று அனுசரிப்புடன் அரவணைப்புடன் கூடவே தேவைப்படின் பொருளாதார நிதித் தேவைகளுக்கு பரஸ்பர உதவி நல்கி வாழ்ந்தவர்கள் ஒரு புறம் என்றால் இந்த மாதிரி பொருளாதார நிதி ஆதாரங்களுக்குயாரையும் எதிர்பாராமல் சுய சார்புடனே வாழ்பவர்கள் அபூர்வம்.

(To be continued)

Human Survival Instincts par Excellence!!

Living with and striving for principles, at its best!!

Comprehending life's realities yet compromising to life's turnarounds at no cost (am I right to say so, should it be 'at all costs?), at its best !!

Living with certain idealism, working and exerting every effort to live up to that idealism, no compromises at all times by all means despite adverse situations however that may be obliging one to sacrifice values and ethics thus striving to live up to one's own expectations, at its best!!
Watching, observing, listening, however frightening to survive at all odds yet learning life with the flow (however that means to flow with or sail against at times!!), yet you ensure do not lose your integrity and identity, at its best !!

Respecting and Regarding people for whom they are, despite adverse behaviors at times by very same people at all odds (other party might be justified to behave as such, yet) you do not lose your conscience and you tend to adjust to terms with such souls whom you trust, respect and regard for ever, sustaining this quality at its best !!

However time changes - favorably or unfavorably , positively or negatively - constant changes in the environment would still behold you to your own person that you are, come what may, you continue to exert resonance and exercise restraint at all times so as to facilitate you to stand to sustain your status as you are, at its best !!

"Men may come Men may go" You value ethics, values and principles and you stand apart however you are forced to compromise your position, you do not succumb to pressure and you live up to what's reposed in you, on you and for you, at its best !!

Qualitative evaluation, Quantifiable variables do not change your perception to Life's hard realities however that may have caused you discomfort, inconvenience and personal loss (resulting in a sort of vacuum in your approach to life leading you many times to feel NOT at ease at all (however that would imply in terms of emotional, psychological, physiological, biological impact thus you feel sort of incapacitated beyond your comprehension, yet digesting all these at your best !!

Can anyone live up to such level of elated emotional comfort at any time?

Discreet Thoughts from Discree Minds (1)

Originally Conceived Ideas, Perceived methodologies, indisputable and appropriate Actions in a meaningful approach and cohesion of  'Scheme of Purpose' (SOP-1), 'Scope of Work' (SOW) supported by 'Standard Operating Procedures' (SOP-2) followed by 'Synchronized Deliverable(s) with asynchronous arithmetic workarounds', lead to Ideal Solution many a times  (be it a discovery, innovation or sustained / on-going success in achieving the desired results).

Somewhat original ideas, ill-conceived methodologies, questionable and inappropriate Actions in a not-so-coherent approach and cohesion with not-so-well-documented 'SOP-1', SOW; and not so well-supported SOP-2 followed by whatever means utilized  to achieve the desired results lead to major catastrophes many a times!!

Not so original ideas but just plagiarism, however may be the other parameters, characteristics and value variables that one might possess (SOP-1, SOP-2, SOW et al), in a neat cohesion,  however one may show a some-what visible but unreliable success, such a result cannot endure for long.

Couple these with 'Human Survival Instincts Par Excellence' that I shared a while ago can mean a lot when you analyze life and its several facets that one endures on the go viz.:

Comprehension, Complacence, Connivance, Covenance, Coherence, Corroboration, Collaboration, Constant Progression towards achieving Excellence par Qualitative Improvements, crystal clear attempts to derive Six-Sigma like Bench-Mark Accuracy in Standards, Exhibition of Coward but Compulsive, Obsessive, Idiotic and ridiculous ideals!!

Oh, can one think of stopping to think in these angles, is there any limit to the weights and heights of such thoughts taking you forward or any further.

(Such discreet thoughts would continue).

சிவன் கோயில், வில்வ மரம்:சில நினைவுகள்

சிவன் கோயில், வில்வ மரம்:சில நினைவுகள்

ஊருக்குக்  கட்டக் கடைசியில் உள்ள தெரு அது.  அந்த ஊரிலேயே மிக நீளமான  தெரு என்றும் சொல்லலாம் (முக்கிய  சாலைகளை நீக்கிவிட்டு மக்கள் வசிக்கும் தெருக்களை  மட்டும் கணக்கிட்டால்). சுமார் 2 கி.மீ.  நீளத்தில் கிட்டத்தட்ட அப்போதெல்லாம் 150 அல்லது 175 வீடுகள் இருந்தன. இப்போது  300 ஆகியிருக்கலாம்.

எல்லாம் அடுத்தடுத்து இருக்கும் ஒரு வீட்டின் முக்கியசுவர் அடுத்த வீட்டின் புறச்சுவர் (தாய்ச்சுவர் என்பர்) என்கிறமாதிரி முதல்வீட்டிலிருந்து கடைசி வரைக்கும் தொடர்வீடுகளாய் இருக்கும், ஆங்காங்கு வரும் இடைச் சந்துகள் மற்றும் காலி மனைகள் மட்டுமே அந்தத் தொடர் வீடுகளை ஒன்றிலிருந்து  மற்றதைப் பிரிக்கும்.

ஒவ்வொரு வீடும் குறைந்தபட்சம் 30 அடி அகலம் 200, 220 அடிநீளத்தில் இருக்கும். ஒவ்வொரு வீடும் சுமார் 2 கட்டு வெகுசில 3கட்டு என்று  இருக்கும். 2 கட்டு வீடாய் இருந்தால்3ம் கட்டு இருக்கும் இடம்  தோட்டமாக இருக்கும். மா, பலா, தென்னை,வாழை, புளிய மரம் கூடவே  பூச்செடிகள், நாரத்தை, எலுமிச்சை அல்லது  கிடாரங்காய் மரங்கள் என்று ஒவ்வொரு  வீட்டிலும் ஒவ்வொரு ஸ்பெஷல் மரங்கள்  இருக்கும், சில வீடுகளில் பின்புறம் வாதாமரம் கூட இருக்கும்.

நாங்கள் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும்போது அந்த வாதா மரத்தின்  கொட்டைகள் (வாதாங்காய்) கீழே விழுந்திருப்பதைப் பிரித்து  கொட்டை எடுத்து வாதா சாப்பிடுவதில்  ஒரு போட்டியே இருக்கும். விடுமுறை காலங்களிலும் மற்றும் தினசரியே காலை  நேரங்களில் அக்கம் பக்கம் வீடுகளில்  உள்ள மல்லிகை, குண்டு மல்லி, பவழமல்லி, டிசம்பர் சீசனில் டிசம்பர்பூ, நந்தியாவட்டைப்பூ, செம்பருத்தி, மஞ்சள் அல்லது செவ்வரளிப் பூச்செடிகள் என்று வகை வகையாய் இருக்கும்.

பூஜைக்காக  என்பதால் யார் வீட்டிலும் போய்  'எங்கப்பா பூ எடுத்துண்டு வரச்சொன்னாங்க' என்று சொன்னால் யாரும்  ஒன்றுமே சொல்ல மாட்டார்கள். 'எடுத்துக்கோடாப்பா',"போறச்சே கேட்டைச் சாத்திண்டு போ" "ஏன்டாப்பா, இன்னைக்கு நிறைய பூ பூத்திருக்கு  போலருக்கே, எனக்கு ஏறிப் பறிக்க  முடியலேடா, எனக்கும் கொஞ்சம் தர்றியா''ஜாக்கிரதைடா, செவுத்து மேல ஏறாதேடா கொழந்தே ,பாத்து பறிச்சுக்கோ, ஸ்கூல் போகணுமோல்லியோ, ரொம்பநாழி விளையாடாதேள்' என்று அந்தந்த வீட்டிலிலுள்ள  தாத்தா பாட்டிமார்கள் வாஞ்சையுடன் இன்ஸ்ட்ரக்சன் கொடுப்பார்கள்.

சில வீடுகளில் பூப் பறிக்கிறேன் என்கிற  சாக்கில் மாமரத்தில் நைஸாக ஏறி மாங்காயோ  கொய்யாக்காயோ பறிப்பதுண்டு.  யாராவது  பார்த்துவிட்டால் வாண்டுகளாக நண்பர்கள் தங்களுக்குள் 'ஏய், பாட்டி பாக்குதுடா,  டவுசருக்குள்ள வச்சுக்கோடா, இல்லேன்னா அப்பாட்ட சொல்லி டின்னு  கட்டிடிவாங்கடா' என்று எங்களுக்குள்ளேயே ரகசியம்  பேசிக் கொள்வோம்.

அதில் வெங்கு மாமா வீட்டுத் தோட்டத்தில் மேலே சொன்னமாதிரி பூப்பறித்த அனுபவம் ஜாஸ்தி. காவிரிக்கரை ஓரம் ஒரு ஜீவசமாதிக் கோயில் மாதிரி துளசிமாடம் வைத்து ஒரு கோயில் மாதிரி அமைப்பு இருக்கும். எங்களுக்கெல்லாம் அந்த வயதில் அதன்  முக்கியத்துவம் தெரியாது. வருடத்தில் சில நாட்களில் அக்ரஹாரத்தில் சில வீடுகளிலிருந்து அங்கு உள்ளே சில பூஜை புனஸ்காரங்கள் நடக்கும். அதுமாதிரி ஒரு கோயிலை அடுத்துதான்  வெங்கு மாமா தோட்டம் இருக்கும்.அதற்குள் சென்று போய் பூப்பறிக்கும்  ஆவலே எங்களுக்கு அலாதிதான். வெங்கு மாமாவின் கடைசிப் பையன் சங்கர் வாண்டு எங்கள் செட் வேற.  கேக்கணுமா?

தினம் காலையில் லூட்டிதான். ஒருவீட்டின் வாசலில் குண்டுமல்லி அழகாகப்  பூத்திருக்கும். அதற்கடுத்து நாலைந்து வீடு தள்ளியுள்ள  வீட்டில் முகப்பில் உள்ள பவழமல்லி மரம்  பூப்பூத்து கண்ணைப் பறிக்கும் அழகில் இருக்கும். அந்த வீட்டுப் பாட்டி (முத்தம்மா) சில சமயம் திட்டுவார் 'போங்கடா, பூப்பறிக்க வந்துட்டேளாக்கும்,  நாங்களே இன்னும் எங்களுக்கே பறிச்சுக்கலை,  அதுக்குள்ள என்ன' என்று அந்தப்பாட்டி சிலசமயம் திட்டுவார்.  சிலசமயம் காலையில் வேறு வேலையாய் நாம் அந்த வீட்டை க்ராஸ் செய்து போகும்போது ச்சும்மாவே எங்களைச் சீண்டுவார் 'ஏன்டா அம்பி, இன்னைக்கி பூப் பறிக்கலையா, உங்கப்பா  இன்னிக்கு ஊர்ல இல்லையா, அதான்  பூ பறிக்கலையா' என்று  அங்கலாய்ப்பார். எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாய் இருக்கும். அதெப்படி இந்த பாட்டி  சில  சமயம் திட்டுகிறார், சில  சமயம் வாஞ்சையுடன் கேட்கிறார்  என்று தோன்றும்.

அவர் வீட்டில் பூக்கும் அந்தப்  பவழமல்லிக்கு அந்தத் தெருவே ரசிக்கும்.  யாராவது உயரமானவர் கிளைகளைப் பற்றி ஒரு உலுக்கு  உலுக்குவார். இல்லை நாங்கள் வாண்டுகளே  மரத்தில் ஏறியோ ஒரு குச்சியை  வைத்துக்கொண்டே உலுக்குவோம், பொலபொலவென்று பவழமல்லி சிதறும். அதை  அள்ளுவதில் ஒரு போட்டி எங்களுக்குள். வீட்டுக்கு எடுத்துப்போய் பூ நாரிலோ அல்லது  நூற்கண்டு எடுத்து ஊசிமுனையிலோ மாலையாய்  தொடுத்துக் கொடுத்தால் சாமி அலமாரி அருகில் வைத்துவிடுவோம். எங்கள் வீட்டில் என் அப்பாவோ அல்லது வீட்டுக்கார மாமியோ (பாட்டி) பூஜை வேளையில் சாமிக்கு  அலங்காரமாய் போடுவார்கள்.

சிலசமயம் நண்பர்களுக்குள் போட்டி  இருக்கும், "நான்  கட்டற மாலை பெரிசா, நீ  கட்டற மாலை பெரிசா" என்று.அக்கம் பக்கம் இருக்கும் வீடுகளில் எங்கள் சம வயது பெண்களோ அக்காக்களோ  தங்கைகளோ கூட இந்தப் போட்டியில்  கலந்துகொள்வர்.

முன்னர்  சொன்னதுபோல் தெருவின் நீளம் 2 கி.மீ.க்கு மேல்  என்பதால் எங்கள் தெருவில் மட்டும் ஒரு விதமாய் பேச்சு வழக்கு  இருக்கும். அதாவது ஒரே பெயரில்  ரெண்டு மூணு நண்பர்கள் இருந்தாலோ  பொதுவாக விளையாடச் சென்றாலோ 'அம்மா, நான் 65லஇருக்கேன். தேடாதே'   'அப்பா,  94ல அவாத்துல ஏதோ பூஜையாம்  நாங்கள்ளாம் அங்கதான் இருப்போம்'னு  நம்பர் சொல்லித்தான் அடையாளப்படுத்துவோம்.

ஸ்கூல் போயிட்டு 4 அல்லது 4.30 மணிக்கு சாயங்காலம் வந்தால்  கை கால் அலம்பிக்கொண்டு  டீயோ காப்பியோ ரெடியா இருக்கும்,மண் அடுப்புக்குள் அக்கா போட்டு வைத்திருப்பார்.  அதைக் குடித்துவிட்டு 'அக்கா நான் கிழக்கே  முரளி வீட்டுல விளையாடப் போறேன்'னு குரல் கொடுத்துவிட்டு  அய்யா விடு ஜூட்.

சில சமயம் 'டேய், இருடா,இந்த ரேஷன் கடைல கிரோசின்  போடறானாம்டா, செத்த வாங்கிண்டு வந்துடுடா'  என்று அக்கா சிலாகிப்பார். அக்கா குரல் கொடுத்தவுடனே எதிர் வீட்டு அம்புலு மாமியோ வசந்தா மாமியோ   'ஏன்டா,  நீ ரேஷனுக்குப் போறயா,  எனக்கும் மண்ணெண்ணெய் வாங்கிண்டு வரியா'ன்னு லைன் கட்டி அக்கம் பக்கம் ரெடியா இருக்கும். எப்படா இவன் வருவான்,  இவன் தலைல கட்டலாம் என்று  மத்தியானமே பேசி வச்சுண்டு இருப்பாளோ தெரியாது.

இதுமாதிரி  சின்ன வயசில் பாதி நாட்கள் சனி ஞாயிறு உள்பட ரேஷன் கடையில் க்யூவில் நின்று பொருட்கள் வாங்கி வந்த அனுபவம் தனி. அதுக்கு  ஒரு தனிப் பதிவே போடலாம்.  இப்போ சொல்ல வந்ததே வேற.

தெருவே கிழக்கு மேற்காய் வெகு நீளமாய் இருப்பதால், எங்களுக்குள் பேச்சு இப்பத்தான் இருக்கும்.'சங்கரா, எங்கடா போற' என்றால்  மேற்கே போறேன் என்றோ;   'ஏய் அம்பி, கிழக்கத்தானே  போறே, எங்காத்து கோண்டுவைப் பாத்தா செத்த வரச் சொல்றயா' அப்படின்னு 75 வீட்டு சம்பத் ஐயங்கார்  சொல்வார்.

இல்லேன்னா  நாங்கள்ளாம் ப்ரெண்ட்ஸ் ஒருத்தருக்கொருத்தர் கிட்டிப்புல்லோ, பலிங்கியோ (கோலி) தெருவில் விளையாடும்  கிரிக்கெட் (தென்னை மட்டை தான்பேட், ரெண்டு மூணு குச்சிகள்தான்  ஸ்டம்ப், சில வீடுகளில் வெள்ளை காவி வர்ணம் அடித்திருப்பார்கள். அவற்றுக்குள் வசதியான இடமாப் பார்த்து ஆடுகளம் அமைச்சுண்டுட்டா அதுதான் ஸ்டம்ப்.  இப்படி செட் சேர்க்கும்  சாக்கில் யார் வீட்டிலோ போய்'மாமா, ரவி இருக்கானா'னு  கேட்டால், 'வாடா, உன்னைத்தான் இத்தனை நாழி தேடிண்டிருந்தான், இப்பத்தான் கெழக்கே போயிருப்பன்' குமார்  ஆத்துலயோ கணேசனாத்துலயோ போய்ப் பாரு' என்று  நண்பனின் அப்பா குரல் கொடுப்பார்.


நண்பர்கள் தரணி, சாமு, மோகன், கிப்ஸ் கண்ணன் (எ) ராமசாமி, கேச்சு (எ) கணேசன், வெங்கட்டா, ரமேஷ், கேதாரி, பெரியசாமி, சந்துரு, சுந்தர் (மருந்துக்கடை), பட்டாபி, பிச்சை, முண்டு  (எ) முரளி, அவர் தமையனார் கோண்டு (எ) கோதண்டராமன், பிச்சையின் அண்ணா குமார், கண்டு கணேசன், வாஜ்பாய் குமார், நட்டி (எ) நடராஜன், துபாய் சேட் வீட்டு தமீஸ்கான், காவிரிக்கரை கணேசன், தம்ஸ் என்கிற சுரேஷ், கிரிக்கெட் சுந்தர், கயத்துக்கடை வீட்டு ராஜா, வேம்பாச்சு, சுப்புடு, முரளி, வேணு சகோதரர்கள் என்று எங்கள் சம  வயது கோஷ்டி ப்ரபலம் அந்தக் காலத்தில்.

எங்களைத் தேடி வரும் வெளித் தெரு பள்ளி நண்பர்கள் இந்தக் கிழக்கே மேற்கே, 64, 84, 97 என்று பேசும் எங்கள் பேச்சு வழக்கை கிண்டலடிப்பர்.  எனக்குத் தெரிந்து குடந்தையில் எங்கள் தெருவில் மட்டும்தான் இந்த வழக்கம் இருந்தது எனலாம்.

மேற்குப் பகுதியில் ரெண்டு கோயில்கள் உண்டு.ஒன்று மேலக்கோடியில் இருக்கும் கற்பக வினாயகர் ஆலயம்.  அங்கு வினாயகர் மட்டும்தான். அதைத்தாண்டி இடது பக்கம் பேக்டரி பக்கம் ஒரு தெரு அல்லது சந்து போகும். வலது பக்கம்  ரெண்டடி அகலத்தில் ஒரு சந்து போகும், அது காவிரிக் கரைக்குப் போகும் பாதை. கோயிலுக்குப் பின்புறம் ஒரு பெரிய ஓடை அல்லது குட்டை மாதிரி இருக்கும்,அதன்பின் நல்ல பெரிதாய் ஒரு தென்னந்தோப்பு இருக்கும். அதில் சில மாமரங்கள்,  பலா மரங்கள், வேப்ப மரங்கள் என்று கலந்து கட்டி எப்போதும் நிழலாய் இருக்கும் அதற்கு நீலாவதித் தோட்டம் என்று பெயர்.அங்கு வாட்ச்மென் மாதிரி ஒரு குடிசைபோட்டு ஒரு தாத்தா, ஒருநடுத்தர வயது அம்மா, அவர்களுக்கு ரெண்டு பெண்கள் என்று ஒரு குடும்பம் வசிக்கும். அவர்கள்தான் அந்தத் தோட்டத்திற்கு காவல்.

விடுமுறை நாட்களில் மழையில்லாத வெயில் நாட்களில் எங்களுக்கெல்லாம் மெரினா விஜிபி கோல்டன் பீச் நீலாவதித் தோட்டமும் அதற்கும் பின்னே உள்ள செட்டிப்படித்துறைதான்.  அங்கு விளையாடியது, லூட்டி அடித்த அனுபவங்கள் மற்றும் ஓர் தனிப்பதிவில் வருகிறது.

ரெண்டு கோயில்களில் ஒன்றைத்தான் சொன்னேன். ரெண்டாவது கோயில், தெருவுக்கு நடுவில் உள்ள கல்யாண மண்டபத்திற்கு எதிரில் காவிரிக் கரைக்குப் போகும் எட்டாம் திருனாள்படித்துறைக்கு போற வழியில் இருக்கும்.அதற்கு விசாலாட்சி கோயில் என்று பெயர்.  கோயில் பெரிதாய் பல சன்னதிகள் உண்டு. ஆனால் கிழக்கு வாசல்  எப்போதும் ஆள் நடமாட்டம் இல்லாமல்  சாத்தியே இருக்கும். தெற்கு வாசல்தான் பிரதான வாசல்.

பண்டிகைக் காலங்களிலும் மார்கழி மாதத்திலும் எங்களைப்போல வாண்டுகள், பாவாடை தாவணி போட்டஅக்கம்பக்கத்து வீட்டுப் பெண்கள் எல்லாருக்கும் பொழுதுபோக்கு இந்தக் கோயில்தான். மார்கழி மாதம் வந்துவிட்டால் ஸ்கூல வேற அப்பப்ப லீவ் விட்டுடுவாங்களா? ஜாலிதான்.

ஸ்கூல் நாட்களில் இப்போது மாதிரி 7 மணிக்கு 7.30 மணிக்கு ஓடும் வழக்கம் எல்லாம் கிடையாது. 9 மணிக்குத்தான் கிளம்புவோம். எனவே காலையில் 5 அல்லது  6 மணிக்கு எழுந்தபின் திண்ணையில் உட்கார்ந்து படிக்கிறோம் என்கிற பெயரில் 1 மணி நேரம் போகும். பிறகு இதுமாதிரி அதிகாலை லூட்டிகள் வேற.

மார்கழி மாதம் 4 அல்லது 4.30 மணிக்கெல்லாம் வெங்கு மாமாவின் பையன் சங்கரின் அண்ணா ஜேம் மாமா (ஜெயராமன் என்று பெயர், ஜேம்  என்றுதான் அவரை அழைப்பர்) லவுட்ஸ்பீக்கரில் 'மருதமலை மாமணியே முரூகையா' அல்லது 'சுப்ரபாதம்' என்று பாட்டுப் போடுவார்.  கிட்டத்தட்ட 8 மணிவரை ஏதாவது பாட்டு  ஓடிக் கொண்டிருக்கும். 'கற்பூர நாயகியே கனகவல்லியோ''கற்பனை என்றாலும்......' என்று டி எம்எஸ் ஆரம்பித்துவிடுவார். மார்கழியில் திருப்பாவை நிச்சயம் உண்டு (மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளாய்.......).

என் அப்பா தீவிர சிவபக்தர்.  காலையில் 4.30 அல்லது 5 மணிக்கெல்லாம் குளித்து நித்ய கர்மாக்களையெல்லாம் (சந்தியாவந்தனம்) முடித்துவிட்டு காப்பிக் கச்சேரிக்குப் பின் இந்தக் கோயிலில்தான் 1 மணி நேரமோ என்னவோ ஏதாவது பண்ணிக்கொண்டிருப்பார். ஒரு துடைப்பத்தை வச்சுண்டு  பெருக்கியோ செடிகளுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டோ இருப்பார், இல்லையேல் கையில் ஒரு ஸ்லோகப் புத்தகம் எடுத்துக்கொண்டு விஷ்ணு சகஸ்ர நாமமோ ஐயப்பன் ஸ்லோகமோ ஆஞ்சனேயர் ஸ்லோகமோ  படித்துக்கொண்டிருப்பார்.

காலையில் கோயில் திறந்ததுதான் தாமதம். அப்பா கோயில்  குருக்களுடன் பேசிக்கொண்டே சிற்சில வேலைகளை செய்ய  ஆரம்பித்துவிடுவார். கோயில் தோட்டத்தில் உள்ள பூக்களைப் பறிப்பார், இல்லை காவிரிக்கரையில் காலையில்  குளிக்கச் சென்ற போது வழியில் பறித்த பூக்களைத் தொடுத்துக் கொண்டிருப்பார். அன்றைய காலை பூஜைக்கு அப்பா கட்டித் தரும் மாலை  நிச்சயம் இருக்கும். அல்லது குறைந்தது அப்பா  திரட்டித் தந்த உதிரிப்பூக்கள் இருக்கும்.

அப்போதெல்லாம்  அந்தக் கோயில் அவ்வளவாய் கட்டிடவசதி இருக்காது. ப்ராகாரம் முழுதும் கற்கள் அல்லது குண்டும் குழியுமாய் இருந்தது, போகப் போக தெருவாசிகள்  ஒன்று கூடி ஆஸ்திக சமாஜம்  என்று துவங்கி காலப்போக்கில் சிமென்ட்தரை, ப்ராகாரம் என்று திருப்பணி செய்து  இன்று அந்தக் கோயில் ஜகத்ஜோதியாய் ஜொலிக்கிறது.

இப்போ நாங்களெல்லாம் சென்னையில் குடியேறிவிட்டாலும் எப்போது குடந்தை போனாலும்  இந்த ரெண்டு கோயிலுக்கும் போய் வருவோம்.சில சமயம் நாங்கள் தெருவுக்குள் போகும் நேரம்  கோயில் நடை சாத்தியிருக்கும். சில சமயம் சாயங்காலமாய் தரிசனத்திற்குச் செல்வதுண்டு.

முன்பெல்லாம் ப்ரதோஷம் வந்துவிட்டால் கோயில் களைகட்டும், தெருவிலுள்ள  அனைத்துப் பெண்கள், குழந்தைகள் பெரியவர்கள்  என்று ப்ரதோஷ கால தரிசனத்துக்கு  கூட்டம் ஜமாய்க்கும். குருக்கள் மாமா பசங்க ரெண்டு பேரும் எங்கள் வயதினர்தான். ஒருவர்  அம்பி (சோமாஸ்கந்தன்) சற்று மூத்தவர், இளையவர்  கேச்சு என்கிற கணேசன். எனக்கு  கிளாஸ்மேட் கூட (சேம் செட்).  ஒரே பள்ளியில் வேறு வேறு வகுப்பு.

ப்ரதோஷ அலங்காரம், அபிஷேகம் என்று தெருவாசிகள்  கொண்டு தரும் பூஜைப் பொருட்கள்,தேங்காய் பழம் கொண்ட பூஜைத்தட்டுகள், சொம்பு சொம்பாய் பால் (அபிஷேகத்திற்கு) என்று ப்ரதோஷ தினம்  களை கட்டும்.  ப்ரதோஷம் முடிந்து ப்ரசாத வினியோகத்தில் வரும் காப்பரிசிக்குத்தான் வாண்டுகள் கூட்டம் மொய்க்கும் (அடியேன் உள்பட). மார்கழி மாதமெனில் அதிகாலை பஜனை கோஷ்டி இருக்கும். அதிகாலையில் மாவிலையில் வைத்துத் தரும் பொங்கலுக்கு ஏக டிமான்ட். வாராவாரம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ராகுகாலத்தில் துர்க்கைக்கு பூஜை அபிஷேகம் என்று பெண்கள் கூட்டம் களை கட்டும். இதெல்லாம் தனிப்பதிவாய் போட்டாலும் தகும்.

அந்தக் கோயிலில்  அப்பா 30 or 32 வருஷங்கள் முன்பு செய்த ஒரு  விஷயம் எங்களுக்கு இப்போதுதான் தெரியும். தினமும் பூப்பறிப்பது, சுத்தம் செய்வது அது இது என்று பிஸியாய் இருப்பார், அதன்  பின்னர் ரெண்டாம் முறை காவிரிக்கு சென்று ஸ்னானம் முடித்து மாத்யானிகம் பூஜை எல்லாம் முடித்து 9 மணிக்கு  அலுவலகம் போய்விடுவார். அதன் பின்னர்தான் நான்  ஸ்கூல் போவேன்.

சில சமயங்களில் காலையில் என்னை கோயிலுக்கு அவருக்கு உதவியாய் இருக்க அழைத்துப்  போனதுண்டு.  நானும் கோயில் கிணற்றிலிருந்தோ மோட்டார்  போடாத கைக்குழாயிலிருந்தோ தண்ணீர் பிடித்துத் தருவேன்.  செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற உதவியதுண்டு.

சமீபத்தில்(2013 Feb/March) குடந்தை போனபோது அன்று ஒரு  ப்ரதோஷ தினம் வேறு. வெங்குமாமா வீட்டு சங்கர் இப்போது  ஸ்கூல் சவாரி அது இது என்று பிசியாய் இருக்கும் ஆட்டோ  ஓட்டுனர். எப்போது ஊர் போனாலும் சங்கர்தான் எனக்கு சாரதி. நான் வந்துவிட்டாலே அவரும் தன் வேலைகளுக்கு  நடுவே ரெகுலர் சவாரிகளுக்கு நடுவே என் பயணத்திட்டம் வகுத்து சுவாமிமலை உப்பிலியப்பன்கோயில் பட்டீஸ்வரம், சூரியனார் கோயில் என்று கோயில்  வலம் வருவோம்.

அன்றும்  சுவாமிமலையில் யதேச்சையாய் ப்ரதோஷ தரிசனம் கிட்டியது. நான், என் மனைவி, என்தமையன் அவர்தம் மனைவி என்று  நால்வரும் சங்கரிடம் 'டயம் இருக்குமா, விசாலாட்சி  கோயில் போகணுமே' என்று கேட்டோம்.  தாராளமா என்று சொல்லி தெருவுக்குள்  நுழைந்தால் அம்பி அன்றைய ப்ரதோஷ  பூஜைகள் முடித்து சற்று ஓய்வாய்  அமர்ந்திருந்தார்.
இரவு7.30 மணிக்கு மேல் இருக்கும் என்று  நினைவு. ப்ரதோஷம் 5.30 அல்லது 6.30 க்குள் முடிந்திருக்குமே. நாங்கள்  சுவாமிமலையில் தரிசனம் செய்யும்போதே 6 மணி ஆகிவிட்டது  என நினைவு.

விசாலாட்சி  கோயிலில் அம்பியுடன் பேசிக்கொண்டே இருந்ததில் ஸ்வாமி தரிசனம் செய்யும்போதே  கேச்சுவும் வந்துவிட்டார். கோயிலில் வேறு ஒருசன்னதியில் பக்தர் ஒருவருக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தார் போலும்.

கேச்சுவைப்பார்த்தே கிட்டத்தட்ட 20 30  வருடங்கள் இருக்கலாம். அவர் நாகப்பட்டினம் உத்யோகத்துக்கு  சென்றார், நான் சென்னை மும்பை  வெளி நாடு என்று அலைந்ததில்  இருவரும் சந்திப்பதே அபூர்வமாகிவிட்டது.

அன்று கேச்சுவைப் பார்த்ததில் ஒரு அலாதியான  மலரும் நினைவுகள் எங்களிடையே  இருந்தது.

பேசிக்கொண்டே  ஸ்வாமி தரிசனம் செய்து கொண்டே இருந்ததில்  அம்பிக் குருக்கள்தான் சொன்னார், கோயில் இப்போது எப்படி  வளர்ந்துள்ளது, அதில் அவர்தம் மலரும்  நினைவுகளாய் சில விஷயங்கள் பகிர்ந்துகொண்டார்.

அப்போதுதான்  கிழக்கு வாசல் திறந்து  காட்டினார், அங்கு கிட்டத்தட்ட 20 or 30 அடி உயர வில்வமரம் இருந்தது. வயதுக்கே உரிய கிழடு தட்டிமரம் பழைமை மாறா வாசமுடன்  நெடிந்துயர்ந்து இருந்தது.

அம்பியும்  கணேசனும் சொன்னதிலிருந்து புரிந்தது. இந்த வில்வ மரத்தை  சிறு கன்றாய் காவிரிக்கரையிலிருந்து கொண்டு வந்து  துர்க்கை சன்னதிக்கு எதிரில் 30 வருஷம் முன்பு என்  அப்பாதான் வைத்தாராம், தினமும் அதற்கு தண்ணீர்  ஊற்றி வந்திருக்கிறார் (மற்ற செடிகளுக்கு ஊற்றும்போது  நானும் இதற்கு தண்ணீர் ஊற்றியிருக்கலாம்,  எனக்கு நினைவில்லை).

காலப்போக்கில்  கோயில் திருப்பணி காரணமாய் ரெண்டு மூன்று  கும்பாபிஷேகம் நடந்து இருக்கிறது. திருப்பணியின்  ஒரு அங்கமாக ப்ராகாரத்தில் தளம்  அமைக்கும் பணியில் இந்த வில்வமரமும் வேறு சில பூச்செடிகளும்  கிழக்கு வாசலுக்கு மாற்றியிருக்கிறார்கள்.

எங்கள் அப்பா இயற்கையெய்தி 4.5 வருடம்ஆகிறது. அவர் எப்போதும் அந்தக் கோயிலில்தான் இருப்பார், தன் ஓய்வு நேரத்தில் மாலை வேளைகளில் ஏதோ ஒரு பாராயணம் படித்துக்கொண்டேயிருப்பார்.

அப்பா வைத்து வளர்த்த அந்தவில்வ மரம் இன்றும் அங்கு இருக்கிறது. அதைக் காணும்போது எனக்கும்  என் தமையனாருக்கும் அது ஆனந்தக் கண்ணீரா நெகிழ்ச்சியில் வந்த கண்ணீரா, இறைவனே அறிவான்.

அப்பா ஊரிலேயே இருந்துவிட்டார், எப்போதாவதுதான்  சென்னையில் எங்கள் வீட்டில் சிலவருடங்கள் இருந்தார். நாங்கள் இருவரும் வெளியூர்  வெளி நாட்டு வேலை என்று போய்விட்டதாலும் சென்னையில் செட்டிலாகி  விட்டதாலும் அவருக்கே பிடித்த மாதிரி  குடந்தைதான் வாசம் இறுதிவரை. கடைசிக்காலத்தில்  86 வயதில் 6 மாதம் சென்னையில் இருந்தார்.  (அவரைக் கடைசியாய் சென்னைக்கு நானும் என் மகனும்  ஆம்புலன்சில் ஒரு தைப்பொங்கலன்று அழைத்துக்கொண்டு  சென்னை வந்தோம், அது தனிக்கதை,  தனி அனுபவம்). அதன்பின் அவர் கும்பகோணத்துக்குத்  திரும்பவேயில்லை.

கற்பக வினாயகர் கோயில், நீலாவதித்தோட்டம், செட்டிப் படித்துறை, ஒழுங்குபடித்துறை,  8ம் திருனாள் படித்துறை, வெங்குமாமாவின் தோட்டம், 84ம் வீட்டின் பவழமல்லி  மற்றும் மஞ்சள் அரளி, ஹாஜியார் வீட்டு வாசல் குண்டுமல்லிப்பூ வாசம், விசாலாட்சி கோயில் அனுபவங்கள், சாஸ்தாஆஸ்ரம அனுபவங்கள் எல்லாம் கலந்த பலமலரும் நினைவுகள் (தொடரும்).

எங்கள் சோலையப்பன் தெரு மலரும் நினைவுகள்  இனியும் வரும்.